Skip to main content
பாகிஸ்தான் கடைத்தொகுதியில் தீ
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

பாகிஸ்தான் கடைத்தொகுதியில் தீ - ஐந்து நாளாகியும் 31 பேரைக் காணவில்லை

வாசிப்புநேரம் -
பாகிஸ்தான் கடைத்தொகுதியில் தீ - ஐந்து நாளாகியும் 31 பேரைக் காணவில்லை
படம்: AP/ Ali Raza
பாகிஸ்தானின் கடைத்தொகுதியில் ஏற்பட்ட தீச்சம்பத்தில் மேலும் ஐந்து சடலங்கள் மீட்கப்பட்டிருக்கின்றன.

அதனைத் தொடர்ந்து மாண்டோர் எண்ணிக்கை 28க்கு அதிகரித்திருக்கிறது.
இன்னமும்கூடக் காணாமல்போனோரைத் தேடும் பணி தொடர்கிறது.

கராச்சி (Karachi) நகரில் உள்ள Gul Plaza கடைத்தொகுதியில் சனிக்கிழமை (17 ஜனவரி) தீ மூண்டது.

24 மணி நேரத்திற்கு மேல் நெருப்புப் பற்றி எரிந்தது. தீ மூண்டதற்கான காரணம் இன்னும் தெரியவில்லை.

காணாமல்போனதாகக் கூறப்படுவோரில் 31 பேர், சம்பவம் ஏற்பட்ட இரவில் கடைத்தொகுதியில் இருந்தனர்.

அதனைக் கைத்தொலைபேசித் தரவுகள் காட்டுவதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் கூறினார்.

அவர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேரும் அடங்குவர்.

தீயணைப்பு வீரர்களில் ஒருவர் மாண்டார்; மற்றொருவர் காயமுற்றார்.

கடைத்தொகுதியின் பெரும்பகுதி சேதமடைந்துவிட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

மேல் தளம் எப்போது வேண்டுமானாலும் இடிந்துவிழக்கூடிய நிலையில் புகைந்து கொண்டிருப்பதால் அங்கு செல்ல முடியவில்லை என்று மீட்புக் குழு அதிகாரி சொன்னார்.

காணாமல் போனவர்கள் கிடைக்கும்வரை மீட்புப் பணி தொடரும் என்றார் அவர்.
 
ஆதாரம் : AP

மேலும் செய்திகள் கட்டுரைகள்