Skip to main content
டிரம்ப்பின் வரி
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

டிரம்ப்பின் வரி - காஷ்மீர் கைவினைக் கலைஞர்களுக்கு வந்த சோதனை

வாசிப்புநேரம் -
காஷ்மீரில் கைவினைக் கலை மிகவும் பிரபலம்.

பலர் குடும்பமாகப் பல ஆண்டுகள் அத்தொழிலைச் செய்துவருகின்றனர்.

கைவினைப் பொருள்களில் மிகவும் பிரபலமானது பாஷ்மினா (Pashmina). அவற்றின் விலை இனி அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

அதற்குக் காரணம் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு அமெரிக்கா விதித்துள்ள 26 விழுக்காட்டு வரி.

வரி நடப்புக்கு வரும்போது கைவினைக் கலைஞர்கள் சிரமப்பட நேரிடலாம் என்கிறார் அத்தொழில் செய்யும் மிர் (Mir).

கைவினைப் பொருள் விற்பனை வாயிலாக இந்தியாவுக்கு ஆண்டுக்கு 465 மில்லியன் அமெரிக்க டாலர் வருமானம் கிடைக்கிறது.

அந்த வருமானத்தில் கால்வாசி அனைத்துலகச் சந்தைகளிலிருந்து வருகிறது, அமெரிக்காவிலிருந்து வரும் 20 விழுக்காடும் அதில் அடங்கும்.

 
இந்நிலையில் வரியால் ஏற்படக்கூடிய சிரமங்களை எப்படிச் சமாளிப்பது என்பது குழப்பமாக இருப்பதாக அவர் CNA செய்தியிடம் சொன்னார்.

பலர் கைவினைத் தொழிலை விட்டு விலகலாம். நாளடைவில் தொழில் மறைந்தே போகலாம் என்றார் அவர்.

இதனைக் கருத்தில்கொண்டு கைவினைப் பொருள்கள் மீதான வரிகளைக் குறைக்க இந்திய அதிகாரிகள் அமெரிக்காவுடன் பேசுவார்கள் என்பதே தங்களது எதிர்பார்ப்பு என அவர்கள் கூறினர்.

அது முடியாவிட்டால் தங்களுக்கு உதவ அரசாங்கம் மானியங்கள் அறிவிக்க வேண்டும் என்று அவர்கள் கோருகின்றனர்.
 
ஆதாரம் : CNA

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்