Skip to main content
மோசமாக ஆடிய டென்னிஸ் வீராங்கனை... இணையத்தில் கண்டனம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

மோசமாக ஆடிய டென்னிஸ் வீராங்கனை... இணையத்தில் கண்டனம்

வாசிப்புநேரம் -
மோசமாக ஆடிய டென்னிஸ் வீராங்கனை... இணையத்தில் கண்டனம்
TikTok/ClipToPicks

கென்யாவில் நடந்த டென்னிஸ் போட்டியில் எதிர்பாராத விதமாக ஒரு பெண்ணுக்குப் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது. 

அவருக்கு அனுபவம் இல்லாததால் மிகவும் மோசமாக விளையாடினார். 

எகிப்தைச் சேர்ந்த ஹஜார் அப்துல் காதர் (Hajar Abdelkader) என்பவர் அனுபவமிக்க வீராங்கனை லொரேன ஷேடெலுக்கு (Lorena Schaedel) எதிராகப் போட்டியிடத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

போட்டி ஜனவரி 7ஆம் தேதி நடந்தது.

ஆட்டம் 37 நிமிடங்களுக்கு நீடித்தது. திருவாட்டி ஹஜார் அதில் மூன்றே மூன்று புள்ளிகளை மட்டுமே பெற்றார். 

காணொளி TikTok தளத்தில் பதிவிடப்பட்டது. அதைக் கண்ட இணையவாசிகள் பலர் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.

தகுதியுடைய பெண்களுக்குப் பதிலாகத் திருவாட்டி ஹஜார் தேர்ந்தெடுக்கப்பட்டதை இணையத்தில் பலர் குறைகூறினர்.

வேறு சிலர், ஹஜாருக்கு டென்னிஸ் விளையாடத் தெரியுமா என்று கேள்வி எழுப்பினர்.

டென்னிஸுக்குப் பதிலாக pickleball விளையாடுவாரோ என்றும் ஒருவர் பதிவிட்டார்.

அனுபவமில்லாமல் ஏன் ஹஜார் போட்டிக்கு விண்ணப்பித்தார் என்று சிலர் வினவினர்.

கென்யா டென்னிஸ் சங்கம் தவறு செய்ததை ஒப்புக்கொண்டது. போட்டிக்கு மற்றொருவர் தேர்ந்தெடுக்கப்பட்டடார்; கடைசி நிமிடத்தில் போட்டியிலிருந்து விலகினார் என்று அது விளக்கமளித்தது.

ஆதாரம் : AGENCIES

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்