கேரள நிலச்சரிவு - ஊழியர்களைக் காணவில்லை
வாசிப்புநேரம் -
(படம்: RJ Mathew / AFP)
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
இந்தியாவின் கேரள மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஐந்து பேரை இன்னும் காணவில்லை.
அடைமழைக்கு மத்தியில் தேடும் பணிகள் தொடர்கின்றன.
இரண்டு நாளுக்கு முன் ஏற்பட்ட நிலச்சரிவில் குறைந்தது மூன்று பேர் மாண்டனர்.
வயநாடு மாவட்டத்தில் உள்ள ஒரு சுரங்கக் கட்டுமானத் தளத்திற்கு அருகே அவர்கள் வேலை செய்துகொண்டிருந்தனர்.
மனிதர்களின் செயல்களால் அசம்பாவிதம் நடந்ததாகக் கூறிய அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
அதிகாரத்துவ எச்சரிக்கை விடுக்கப்பட்டபோதும் கட்டுமானச் சிதைவுகளும் சேறும் அகற்றப்படவில்லை என்று அவர்கள் கூறினர்.
அதனால் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் ஏற்பட்டது.
குற்றச்சாட்டைக் கட்டுமான நிறுவனம் மறுத்தது.
வேலையிடத்திற்கு உயரே நிலச்சரிவு ஏற்பட்டதாக அது கூறியது.

ஆதாரம் : CNA