Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

'முடியவில்லை... என்னை விட்டுவிடுங்கள்...' - கெஞ்சும் இந்தியாவின் அதிர்ஷ்டக் குலுக்கு வெற்றியாளர்

வாசிப்புநேரம் -

இந்தியாவில் அதிர்ஷ்டக் குலுக்கு ஒன்றை வென்ற ஆடவர், அளவுக்கு அதிகமானோர் நிதி உதவி கேட்பதால் என்ன செய்வதென்று புரியாமல் திணறுவதாகத் தெரிவித்துள்ளார்.

ஏன் தான் அதிர்ஷ்டக் குலுக்கை வென்றேனோ என்று வருந்தும் அளவுக்கு வந்துவிட்டதாகக் கேரள மாநிலத்தைச் சேர்ந்த அனூப் BBC செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

இம்மாதம் அவர் சுமார் 3 மில்லியன் டாலரை அதிர்ஷ்டக் குலுக்கில் வென்றார்.

பரிசை வென்ற ஒருவாரம் கழித்து, உதவி கேட்டுத் தன்னையும் தன் குடும்பத்தையும் தொந்தரவு செய்வதை நிறுத்திக்கொள்ளுமாறு அவர் காணொளி ஒன்றை வெளியிட்டார்.

"முதல் பரிசை வென்ற தகவல் மகிழ்ச்சியை அளித்தது என்னவோ உண்மைதான். ஆனால் தற்போது அப்படித் தோன்றவில்லை. பரிசு கிடைக்காமல் இருந்திருக்கலாம் அல்லது 3ஆவது பரிசை வென்றிருக்கலாம்" என்று அவர் BBC-யிடம் கூறினார்.

பொதுமக்களின் பார்வையிலிருந்து தப்ப வீடு மாறுவது குறித்து அனூப் பரிசீலிக்கிறார்.

வீட்டைவிட்டு இப்போது வெளியே எங்கும் செல்ல முடியவில்லை என்றார் அவர்.

வீடு தேடி வருவோரிடம் தன்னிடம் பணம் ஏதும் இல்லை என்று சொன்னால் அவர்கள் புரிந்துகொள்ளத் தயாராக இல்லை என்று அனூப் குறிப்பிட்டார்.

வரிகளைக் கழித்த பின் அவர் சுமார் 1.8 மில்லியன் டாலரைப் பெறுவார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்