சுனாமி என்றால் என்ன.... அது எப்படி உருவாகிறது?
வாசிப்புநேரம் -
படம்: AFP
ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் (Kamchatka Peninsula) ஏற்பட்ட 8.7 ரிக்டர் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
ஜப்பான், ஹவாயி தீவு (Hawaii) எக்குவடோர் (Ecuador), அமெரிக்காவின் கலிபோர்னியா (California) கடற்கரை ஆகிய பகுதிகளில் சுனாமி அபாயம் உள்ளதாக நம்பப்படுகிறது.
சுனாமி என்றால் என்ன?
துறைமுகம், அலை ஆகியவற்றுக்கான ஜப்பானிய சொற்களை ஒன்றிணைத்த சொல்தான் 'சுனாமி'
கடலுக்கு அடியில் உண்டாகும் கடுமையான நில அதிர்வுகளால் ஏற்படும் பேரலைகள் 'சுனாமி' என்று அறியப்படுகின்றன.
சில சமயங்களில் எரிமலை வெடிப்புகள் அல்லது நிலச்சரிவுகளாலும்கூட சுனாமி உண்டாகலாம்.
சுனாமி, அது உருவாகும் பகுதியிலிருந்து அனைத்துத் திசைகளிலும் வெகுதூரம் பரவும் சக்தி வாய்ந்தது.
சில நேரங்களில் போர்விமானத்தின் அசுர வேகத்தைப் போன்று அவை மிக விரைவாகக் கரையை நோக்கிச் செல்லக்கூடும்.
சுனாமி உருவாகும்போது அலைகளின் உயரம் மிகக் குறைவாக இருக்கும்.
கரையின் அருகே அலைகள் வேகமாய்த் திரண்டு வரும்போது கடல் மட்டத்தின் ஆழம் குறைகிறது.
அதனால் ஏற்படும் அழுத்தம் அலைகளின் உயரம் பெருமளவு அதிகரிக்கக் காரணமாகிறது.
சுனாமியின் தாக்கம் சில மணிநேரம் முதல் சில நாள்கள் வரை நீடிக்கலாம்.
நிலநடுக்கத்தின் அளவு, அதனால் கடலிலிருந்து வெளியேறும் நீரின் அளவு, கடல் மட்டத்தின் நிலவியல் போன்றவை சுனாமி ஏற்படுத்தக்கூடிய சேதத்தின் அளவைத் தீர்மானிக்கின்றன.
2004இல் சுமத்திராவில் ஏற்பட்ட 9.1 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தால் உருவான சுனாமியில் 11 நாடுகளில் சுமார் 220,000 பேர் மாண்டனர்.

ஆதாரம் : AFP