டிரம்ப் விதித்த வரிகளால் பெரிதும் பாதிக்கப்படவிருக்கும் துறைகள்?
வாசிப்புநேரம் -

(படம்: SAUL LOEB / AFP)
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் பல நாடுகளிலிருந்து அமெரிக்கா இறக்குமதி செய்யும் பொருள்களுக்கு வரி விதித்துள்ளார். மற்ற நாடுகள் விதிக்கும் வரிகளுக்கு பதிலடியாக அது அமையும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் பல பொருள்களுக்கு வரி விதிக்கப்போவதாகவும் மிரட்டியுள்ளார்.
இது மிகப் பெரிய வர்த்தகப் போருக்கு வழிவிட்டுவிடுமோ என்று உலக நாடுகள் அஞ்சுகின்றன. திரு. டிரம்ப்பின் வரிகளால் எந்தெந்த துறைகள் அதிகம் பாதிக்கப்படும்?
1) வாகன உற்பத்தி
மார்ச் 26ஆம் தேதியன்று திரு டிரம்ப் அனைத்து வாகனங்கள் மீதும் 26% வரி விதித்தார். இன்று அவை நடப்புக்கு வருகின்றன. இதனால் உலகளவில் வாகனங்களின் விலை அதிகரிக்கலாம்.
2) உலோகங்கள்
திரு டிரம்ப் மார்ச் 12ஆம் தேதியன்று எஃகு, அலுமினியம் ஆகிய பொருள்களின் மீது 25% வரி விதித்தார்.
3) மருந்துப் பொருள்கள்
திரு. டிரம்ப் மருந்துகள் உட்பட மருந்தகப் பொருள்கள் மீது வரி விதிக்கப்போவதாகக் கூறியுள்ளார். இதுவரை பொதுவாக மருந்தகப் பொருள்கள் மீது வரி விதிக்கப்பட்டதில்லை. அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தலாம்.
4) மதுபானம்
ஐரோப்பாவிலிருந்து இறக்குமதியாகும் மதுபானங்களின் மீது 200% வரி விதிக்கப்போவதாகத் திரு டிரம்ப் மிரட்டியுள்ளார். அது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
5) மரக்கட்டைகள்
கனடாவிலிருந்து இறக்குமதியாகும் மரக்கட்டைகள் மீது ஏற்கனவே வரி விதிக்கப்பட்டுள்ளது. அது அதிகரிக்கும் என்று திரு. டிரம்ப் கூறியுள்ளார்.
6) மின்-தகடுகள்
திரு. டிரம்ப் மின்-தகடுகள் மீது 25% அல்லது அதற்கும் அதிகமான வரியை விதிக்கப்போவதாகக் கூறியிருக்கிறார். வளர்ந்துவரும் அத்துறை இதனால் பாதிப்படையும்.
7) எண்ணெயும் எரிவாயுவும்
அமெரிக்கா விதித்திருக்கும் அனைத்து வரிகளுக்கும் பதிலடியாக, சீனா அமெரிக்கா ஏற்றுமதி செய்யும் எண்ணெய் மீது 10% வரியும் எரிவாயு மீது 15% வரியும் விதித்துள்ளது. அதனால் அந்தத் துறை பெரியளவில் பாதிப்பை எதிர்நோக்கலாம்.