ஈரான் புதிய உச்சத்தலைவர் கமேனியின் மகன்?
வாசிப்புநேரம் -
ஈரானின் புதிய உச்சத் தலைவராகத் திரு முஜ்தபா கமேனி (Mojtaba Khamenei) பொறுபேற்றிருப்பதாகக் கூறப்படுகிறது.
திரு முஜ்தபா மறைந்த ஆயத்துல்லா அலி கமேனியின் (Ayatollah Khamenei) மூத்த மகன்.
முஜ்தபா பற்றி...
• முஜ்தபா 1969ஆம் ஆண்டு பிறந்தார். அவருக்கு 56.
• முஜ்தபா உயர்நிலை மதத்தலைவர் அல்ல.
• ஈரானில் அதிகாரபூர்வப் பதவி எதையும் இவர் இதுவரை வகித்ததில்லை.
• ஆனாலும் செல்வாக்குமிக்கவராகக் கருதப்படுகிறார்.
• ஈரானியப் புரட்சிப் படையின் துணைப் படைப்பிரிவுடன் அவருக்கு நெருங்கிய தொடர்பு உள்ளது.
• ஈரான்-ஈராக் போரில் அவர் போரிட்டார்.
• அமெரிக்கா 2019இல் அவருக்கு எதிராகத் தடைகள் விதித்தது.
திரு முஜ்தபாவை ஈரான் நிபுணர்கள் சபை தேர்ந்தெடுத்ததாகத் தெரிகிறது.
ஈரானியப் புரட்சிப் படையின் (IRGC) அழுத்தத்தின் கீழ் அவருக்குப் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
புதிய சர்ச்சை ஏற்படலாம்.
ஈரான் பரம்பரை ஆட்சியை விரும்புவதில்லை.
ஆயதுல்லா கமேனி அடுத்த ஆட்சியாளர் பட்டியலில் தம் மகன் பெயரைக் கொடுக்கவில்லை.
ஈரானின் ஷியா முஸ்லிம் சமயத் தலைவர் அமைப்பில், தந்தையிடமிருந்து மகனுக்குப் பதவியை வழங்கும் நடைமுறை சாதகமாகப் பார்க்கப்படுவதில்லை.

தொடர்புடையது:
ஆதாரம் : Others