Skip to main content
கஷோகி கொலை
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

கஷோகி கொலை - சவுதி பட்டத்து இளவரசருக்குத் தெரியாது: டிரம்ப்

வாசிப்புநேரம் -
கஷோகி கொலை - சவுதி பட்டத்து இளவரசருக்குத் தெரியாது: டிரம்ப்
(படம்: Brendan SMIALOWSKI / AFP)
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுக்கு (Mohammed bin Salman) செய்தியாளர் ஜமால் கஷோகியின் கொலை குறித்து எதுவும் தெரியாது என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் (Donald Trump) தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன் போஸ்ட் ஊடகத்தில் செய்தியாளராகப் பணியாற்றிய திரு கஷோகி 2018ஆம் ஆண்டு இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி தூதரகத்தில் கொலை செய்யப்பட்டார்.

அவரைக் கொலை செய்யுமாறு திரு முகமது தான் உத்தரவிட்டார் என்று 2021ஆம் ஆண்டு அமெரிக்க உளவுத்துறை ஆய்வு கூறியது.

சவுதி அதிகாரிகள் அதை மறுத்தனர்.

திரு கஷோகியின் கொலை வலிமிக்கது என்றும் ஒரு பெரிய தவறு என்றும் திரு முகமது தெரிவித்தார்.

வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் திரு கஷோகியின் மரணம் குறித்துக் கேள்வி எழுப்பிய செய்தியாளரைத் திரு டிரம்ப் கடுமையாகச் சாடினார்.

செய்தியாளர் அவ்வாறு கேள்விகேட்டு சவுதி வருகையாளரை அவமானப்படுத்துவதாகத் திரு டிரம்ப் குறைகூறினார்.
ஆதாரம் : AFP

மேலும் செய்திகள் கட்டுரைகள்