Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

"கொலை செய்யக்கூடிய ரோபோக்கள்" திட்டத்தைத் தற்காத்துப் பேசும் சான் பிரான்சிஸ்கோ காவல்துறை

வாசிப்புநேரம் -

அமெரிக்காவில் கொலை செய்யக்கூடிய ரோபோக்களின் பயன்பாட்டைச் சான்பிரான்ஸிஸ்கோவில் உள்ள காவல்துறையினர்  தற்காத்துப் பேசியுள்ளனர்.

மிகவும் ஆபத்தான சூழ்நிலையில் வேறு வழியே இல்லாத நேரத்தில்தான் அந்த ரோபோக்கள் பயன்படுத்தப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.

கலிபோர்னியா (California) நகரத்தில் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளதாகக் குடியிருப்பாளர்கள் புகார் கூறிவருகின்றனர். அதனையடுத்து மரணத்தை ஏற்படுத்தக்கூடிய இயந்திரங்களைப் பயன்படுத்தத் துப்பறிவாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. 

ஒருவேளை சான் பிரான்சிஸ்கோவின் உயர்நிலைக் காவல்துறை அதிகாரி அனுமதி அளித்தால், கண்மூடித்தனமாய்த் துப்பாக்கிச் சூடு நடத்துவோர் அல்லது தற்கொலைத் தாக்குதலை மேற்கொள்வோர் ஆகியோரைக் கையாள ஆயுதமேந்திய ரோபோக்கள் பயன்படுத்தக்கூடும் என நகரின் உயரதிகாரிகள் தெரிவித்தனர். 

"அத்தகைய ரோபோக்களின் பயன்பாடு மிகவும் நெருக்கடியான நேரத்தில் கடைசித் தெரிவாக மட்டுமே இருக்கும்," 

என்று சான் பிரான்சிஸ்கோ காவல்துறைத் தலைவர் வில்லியம் ஸ்கோட் (William Scott) கூறினார்.

சான் பிரான்சிஸ்கோ காவல்துறை ஏற்கெனெவே சில ரோபோக்களை வைத்திருக்கிறது. 

குண்டுவெடிப்பு அல்லது இதர வெடிச்சம்பவங்களை அதிகாரிகள் தொலைவில் இருந்து கட்டுப்படுத்திக் கையாள்வதற்கு அவை உறுதுணையாக இருக்கின்றன. 

-AFP

ஆதாரம் : AFP

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்