கோலாலம்பூரில் திடீர் பள்ளத்தில் விழுந்து மாண்ட இந்தியச் சுற்றுப்பயணி - இழப்பீடு கேட்கும் குடும்பம்
வாசிப்புநேரம் -
(கோப்புப் படம்: Fire and Rescue Department of Malaysia via AP)
கோலாலம்பூரில் சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் விழுந்து உயிரிழந்த இந்தியச் சுற்றுப்பயணியின் குடும்பத்தினர், மலேசிய அரசிடம் 824,000 ரிங்கிட் இழப்பீடு கோரியுள்ளனர்.
அது கிட்டத்தட்ட 260,000 வெள்ளிக்குச் சமம்.
விஜயலட்சுமி குடும்பத்தை மலேசிய வழக்கறிஞர் எம்.பார்த்திபன் பிரதிநிதிப்பதாக NST செய்தி நிறுவனம் தெரிவித்தது.
இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் 48 வயது விஜயலட்சுமி.
2024 ஆகஸ்ட் 23ஆம் தேதி ஜாலான் மஸ்ஜித் இந்தியா பகுதியில் நடந்து சென்றபோது திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் விழுந்து அவர் உயிரிழந்தார்.
தீவிரமான தேடல் பணிக்குப் பிறகும் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த ஆண்டு ஜூன் மாதம் அவருக்கு மரணச் சான்றிதழ் வழங்குமாறு அவரது குடும்பத்தார் மலேசிய அரசாங்கத்தைக் கேட்டனர்.
ஆனால் திருவாட்டி விஜயலட்சுமி காணாமல்போனவராக வகைப்படுத்தப்பட்டுள்ளதால் மரணச் சான்றிதழ் வழங்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டது.

ஆதாரம் : Others