கோலாலம்பூரில் பள்ளத்தில் விழுந்த பெண்ணைத் தேடப் புதிய வழி
This audio is generated by an AI tool.
மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் திடீரென்று ஏற்பட்ட பள்ளத்தில் விழுந்த பெண்ணைத் தேடப் புதிய வழி பயன்படுத்தப்படுகிறது.
இந்தியச் சுற்றுப்பயணியான திருமதி விஜயலெட்சுமி கடந்த வெள்ளிக்கிழமை (23 ஆகஸ்ட்) ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் உள்ள நடைபாதையில் சென்று கொண்டிருந்தபோது அவரது காலுக்கு அடியில் திடீர் என்று பள்ளம் ஏற்பட்டது. அவர் உள்ளே விழுந்தார்.
8 மீட்டர் ஆழம்கொண்ட பாதாளக் குழிக்குள் அவரைத் தேட அருகிலுள்ள நிலத்தடிச் சாக்கடைத் துளைகள் திறக்கப்பட்டன.
அவற்றிலிருந்து இடிபாடுகள் அல்லது தடங்கலை ஏற்படுத்தக்கூடிய பொருள்களை அகற்ற Flushing எனப்படும் அணுகுமுறை தற்போது பயன்படுத்தப்படுகிறது.
2 துளைகளுக்கான நீரோட்டத்தை நிறுத்துவதால் மற்ற துளைகளில் உள்ள நீரின் அழுத்தம் உயர்த்தப்படுகிறது.
நீரோட்டத்தை மீண்டும் தொடங்கும்போது துளைகளில் உள்ள தடங்கல்கள் அகற்றப்படும்.
அவர் விழுந்து 4 நாள்கள் ஆன நிலையில் புதிய அணுகுமுறை மேற்கொள்ளப்படுகிறது.
இரண்டு பாதாளத் துளைகளில் நீரோட்டம் குறைவாக இருப்பதாக அதிகாரிகள் அறிந்தனர்.
அது எதனால் ஏற்பட்டுள்ளது என்பது தெரியவில்லை. சில பொருள்கள் நீரோட்டத்தைத் தடுக்கலாம் என்று அவர்கள் சந்தேகிக்கின்றனர்.