Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

கோலாலம்பூர் குழியில் விழுந்த இந்தியப் பெண்ணின் குடும்பத்துக்கு அனுதாபம் தெரிவித்த பிரதமர் அன்வார்

வாசிப்புநேரம் -
கோலாலம்பூர் குழியில் விழுந்த இந்தியப் பெண்ணின் குடும்பத்துக்கு அனுதாபம் தெரிவித்த பிரதமர் அன்வார்

Bernama

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் பாதாளக் குழியில் விழுந்த இந்திய சுற்றுப்பயணியைத் தேடும் பணிகள் தொடர்கின்றன.

மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் குழியில் விழுந்த 48 வயதுப் பெண்ணின் குடும்பத்துக்கு அனுதாபம் தெரிவித்துள்ளார்.

திருமதி விஜயலெட்சுமி நேற்று முன்தினம் (23 ஆகஸ்ட்) காலை 8.30 மணியளவில் ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் உள்ள நடைபாதையில் திடீரென்று திறந்த குழிக்குள் விழுந்தார்.

தேடல், மீட்புப் பணிகள் தொடர்வதாகக் கூறிய திரு. அன்வார் மண்ணரிப்பைச் சமாளிக்க வேண்டியிருக்கிறது என்றார்.

ஜாலான் மஸ்ஜித் இந்தியா வட்டாரத்தில் உள்ள ஆறு சாக்கடைகளையும் அதிகாரிகள் சோதனையிட்டனர்.

இதுவரை குழியில் விழுந்த பெண் குறித்து எந்த அறிகுறியும் இல்லை.

அவரது செருப்பு மட்டும் கண்டிபிடிக்கப்பட்டுள்ளதை அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

திருமதி விஜயலட்சுமி இந்தியாவிலிருந்து கோலாலம்பூருக்கு 2 மாதப் பயணம் மேற்கொண்டார்.

அவர் நேற்று (24 ஆகஸ்ட்) இந்தியாவுக்குத் திரும்பவேண்டியது என்று The Star தெரிவித்தது.

ஆதாரம் : AGENCIES

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்