Skip to main content
கென்யாவின் தொடக்கப்பள்ளியில் தீ
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

கென்யாவின் தொடக்கப்பள்ளியில் தீ - 17 மாணவர்கள் மரணம்

வாசிப்புநேரம் -
கென்யாவின் தொடக்கப்பள்ளியில் தீ - 17 மாணவர்கள் மரணம்

Unsplash/Guido Jansen

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

வெளியீடு : 06 Sep 2024 02:12PM புதுப்பிப்பு : 06 Sep 2024 03:36PM

கென்யாவின் மத்திய பகுதியிலுள்ள பள்ளியொன்றில் ஏற்பட்ட தீச்சம்பவத்தில் குறைந்தது 17 மாணவர்கள் மாண்டனர்.

இன்னும் பல மாணவர்கள் மிக மோசமான தீப்புண் காயங்களுக்கு ஆளாகியுள்ளனர்.

அவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டிருப்பதாக BBC செய்தி கூறுகிறது.

அதனால் மரண எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

அந்தத் தொடக்கப்பள்ளியில் தீ மூண்டதற்கான காரணம் விசாரிக்கப்படுகிறது.

பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோருக்கு மனநல ஆதரவு வழங்குவதாகக் கென்யாவின் செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்தது.

கென்யாவில் பள்ளிகளில் தீச்சம்பவம் ஏற்படுவது வழக்கமான ஒன்று எனத் தெரிவிக்கப்பட்டது.

2017ஆம் ஆண்டில் கென்யாவின் தலைநகர் நைரோபியில் மொய் பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் நேர்ந்த தீச்சம்பவத்தில் 10 மாணவர்கள் மாண்டனர்.

20 ஆண்டுகளுக்குமுன் வேறொரு பள்ளியில் நேர்ந்த தீச்சம்பவத்தில் குறைந்தது 67 மாணவர்கள் பலியாயினர்.

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்