Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

"மாநில அரசாங்கம் சொன்னபடிச் செய்யவில்லை" - மீண்டும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் கொல்கத்தா மருத்துவர்கள்

வாசிப்புநேரம் -
இந்தியாவின் கொல்கத்தா நகரில் மருத்துவர்கள் மீண்டும் வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கியிருக்கின்றனர்.

கொல்கத்தா அரசாங்க மருத்துவமனையில் 31 வயதுப் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டுக் கொலையுண்ட சம்பவத்தைத் தொடர்ந்து மருத்துவர்கள் வேலைநிறுத்தம் மேற்கொண்டனர்.

பிறகு மேற்கு வங்க மாநில அரசாங்கம் அவர்களின் கோரிக்கைகளை ஏற்றதைத் தொடர்ந்து வேலைநிறுத்தம் நின்றது.

ஆனால் அரசாங்கம் சொன்னபடி நடந்துகொள்ளவில்லை என்று மருத்துவர்கள் இப்போது போராட்டத்தை மீண்டும் தொடங்கியுள்ளனர்.

மருத்துவமனைகளில் பெண் மருத்துவர்களுக்குப் போதுமான பாதுகாப்புத் தேவை என்பது மருத்துவர்கள் முன்வைத்த முக்கியமான கோரிக்கை.

மருத்துவமனைக் கட்டடத்துக்குள் போதுமான வெளிச்சம் தேவை, அதற்கான விளக்குகளைப் பொருத்த வேண்டும் என்பது ஒரு கோரிக்கை.

பாதுகாப்பை உறுதிப்படுத்த கண்காணிப்புக் கேமரா வேண்டும் என்பது இன்னொரு கோரிக்கை.

மேற்கு வங்க அரசாங்கம் வாக்குறுதி தந்தது, நிறைவேற்றவில்லை என்று தொழிற்சங்கப் பேச்சாளர் AFP செய்திநிறுவனத்திடம் தெரிவித்தார்.
ஆதாரம் : AFP

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்