Jeju Air விமானம் - இரண்டு இயந்திரங்களிலும் பறவைகளின் இறகுகளும் ரத்தமும் கண்டுபிடிப்பு
வாசிப்புநேரம் -

(படம்: REUTERS/Kim Hong-Ji)
தென் கொரியாவில் விபத்துக்குள்ளான Jeju Air விமானத்தின் இரண்டு இயந்திரங்களிலும் பறவைகளின் இறகுகளும் ரத்தமும் கண்டுபிடிக்கப்பட்டதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தகவல் குறித்துத் தென் கொரிய போக்குவரத்து அமைச்சு கருத்துரைக்க மறுத்துவிட்டது.
பறவைக் கூட்டத்தால் இரண்டு விமான இயந்திரங்கள் பாதிக்கப்படுவது மிகவும் அரிது என்று கூறப்படுகிறது.
சென்ற மாதம் (டிசம்பர்) Muan அனைத்துலக விமான நிலையத்தில் நடந்த விபத்தில் விமானத்திலிருந்த 179 பேர் மாண்டனர். இருவர் உயிர் தப்பினர்.
ஓடுபாதையைக் கடந்து விமானம் தடுப்புச் சுவரில் இடித்து வெடித்தது.
விபத்துக்கு நான்கு நிமிடங்களுக்கு முன், பறவைக் கூட்டம் தாக்கியதாகக் கூறி விமானி அவசர அழைப்பு விடுத்தார்.

ஆதாரம் : AGENCIES