Skip to main content
குவைத் அனைத்துலக விமான நிலையத் தாக்குதல்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

குவைத் அனைத்துலக விமான நிலையத் தாக்குதல் - இந்தியர் மரணம்

வாசிப்புநேரம் -
குவைத் அனைத்துலக விமான நிலையத் தாக்குதல் - இந்தியர் மரணம்

(படம்: various sources / AFP)

குவைத் அனைத்துலக விமான நிலையத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் மாண்டார்.

இந்திய வெளியுறவு அமைச்சு அதை உறுதிசெய்தது.

தாக்குதலுக்கு அது கண்டனம் தெரிவித்தது.

அனைத்துத் தரப்பினரும் பொதுமக்கள் மீதான தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என்றும் அது கேட்டுக்கொண்டது.

உயிரிழந்த இந்தியர் ஒரு சுற்றுப்பயணி என்று AFP செய்தி நிறுவனம் கூறியது.

தாக்குதலில் 63 பேர் காயமுற்றனர்.

தனது ஆகாயப்படை தாக்குதலை நடத்தவில்லை என்று ஈரானியப் புரட்சிப் படையின் பேச்சாளர் தெரிவித்தார்.

அமெரிக்காவின் Patriot தற்காப்பு முறையில் ஏற்பட்ட கோளாறே குவைத் விமான நிலையத்தின் பயணிகள் முனையத்திற்கு ஏற்பட்ட சேதத்துக்குக் காரணம் என்று அவர் சொன்னார்.

ஈரானிய ஏவுகணைகளை அது இடைமறிக்கத் தவறியதாக அவர் கூறினார்.

ஈரான் 30 ஏவுகணைகளைப் பாய்ச்சியதாகக் குவைத் சொல்கிறது.

மத்திய கிழக்குப் போரில் குவைத் அனைத்துலக விமான நிலையம் பலமுறை குறிவைக்கப்பட்டது.

இம்மாதம் (ஜூன்) முதல் தேதியிலிருந்து தான் அது முழுமையாகச் செயல்படத் தொடங்கியது.
ஆதாரம் : AFP

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்