Skip to main content
குவைத் அனைத்துலக விமான நிலையம் மீது தாக்குதல்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

குவைத் அனைத்துலக விமான நிலையம் மீது தாக்குதல்

வாசிப்புநேரம் -
குவைத் அனைத்துலக விமான நிலையம் மீது தாக்குதல்

(படம்: KUNA / AFP)

குவைத் அனைத்துலக விமான நிலையம் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. 

ஒருவர் மாண்டார். 60க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர். 

மாண்டவர் இந்தியாவைச் சேர்ந்தவர். இந்தியா அதை உறுதிப்படுத்தியது. தாக்குதலை அது கண்டித்தது. 

விமான நிலையம் பற்றி எரிவதையும் புகைசூழ்ந்திருப்பதையும் காட்டும் படங்கள் சமூக ஊடகத்தில் பகிரப்படுகின்றன. 

பொதுமக்களும் சுற்றுப்பயணிகளும் காயமுற்றதாகக் குவைத் தெரிவித்தது. 

ஈரான்தான் தாக்குதலுக்குப் பொறுப்பு என்று சொல்லி, குவைத், ஈரானிய அரசதந்திரிகள் இருவரை வெளியேற்றியது. 

ஆனால் தாக்குதலுக்கு அமெரிக்காதான் பொறுப்பு என்று ஈரான் சொல்கிறது. 

ஈரானிய ஏவுகணைகளைத் தடுக்க முயன்று தோற்ற அமெரிக்க Patriot தற்காப்பு முறை  விமான நிலையத்தின் மீது விழுந்ததாக ஈரான் கூறுகிறது.

ஆதாரம் : AFP

மேலும் செய்திகள் கட்டுரைகள்