கீவ் மீண்டும் உக்ரேனின் கட்டுப்பாட்டில்..ஆனால் வீதிகளில் போரின் வடுக்கள்..(படங்கள்)

(படம்: AP Photo/Vadim Ghirda)
உக்ரேனிய ராணுவம், கீவ் (Kyiv) வட்டாரத்தை அதன் கட்டுக்குள் மீண்டும் கொண்டுவந்துள்ளது.
இருப்பினும் வட்டாரத்தில் போரின் வடுக்கள் ஆழமாக உள்ளன.
ரஷ்யக் கட்டுப்பாட்டுக்குள் இருந்த ஒரு மாதத்தில் வட்டாரத்தில் வன்முறை தொடர்ந்ததாகக் காட்டும் ஆதாரம் வெளிவந்துள்ளது.
பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும் நம்பப்படுகிறது.
காற்றில் வெடிப்பின் நாற்றம்...
வீதிகளில் சடலங்கள்... சிதறிக் கிடக்கும் மனிதப் பாகங்கள்...
ஒரு வீதியில் குறைந்தது 20 சடலங்களாவது கண்டுபிடிக்கப்பட்டதாக AFP செய்தி நிறுவனம் சொன்னது.
மாண்டோர் சிலர் சில வாரங்களுக்கு முன்பே இறந்திருக்கலாம் என்றும் கூறப்பட்டது.
பூட்சா (Bucha) நகரில் 280 சடலங்கள் கூட்டாக அடக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
குடியிருப்பாளர்கள் சிலரின் முகங்களில் துக்கம்...


அண்டை வீட்டுக்காரர்கள் ரஷ்யப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக அவர்கள் கூறினர்.