அமெரிக்கப் பாடகியின் நாயைத் திருடியவருக்கு 4 ஆண்டுச் சிறை
அமெரிக்கப் பாடகியான லேடி காகாவின் (Lady Gaga) நாயைத் திருடிய மூவரில் ஒருவருக்கு 4 ஆண்டுச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
20 வயது ஜெய்லின் கீஷான் வைட் (Jaylin Keyshawn White) திருட்டுக் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார்.
லேடி காகாவின் ஊழியரான ரயன் ஃபிஷர் (Ryan Fischer) நாய்களை நடக்க அழைத்துச் சென்றபோது ஆயுதமேந்திய கொள்ளைக்காரர்கள் அந்தப் பாடகியின் இரு French bulldog வகை நாய்களைத் திருடினர்.
கண்காணிப்புக் கேமராவில் பதிவான அந்தச் சம்பவத்தின்போது ஃபிஷர் அருகே நின்ற காரிலிருந்து இருவர் இறங்கியது தெரிந்தது.
துப்பாக்கிச்சூட்டுச் சத்தம் கேட்கிறது. ஃபிஷர் கத்திக்கொண்டே கீழே விழுகிறார்.
தாக்குதல்காரர்கள் இரு நாய்களைத் திருடுகின்றனர்.
அவர்கள் சென்றபின் எஞ்சிய நாய் ஃபிஷரை நோக்கி ஓடுகிறது.
தமது நாய்களைத் திரும்பப் பெற 500,000 டாலர் வெகுமதியை லேடி காகா வழங்கினார்.
நாய்களைத் திரும்ப ஒப்படைத்த பெண்மீது திருடப்பட்ட பொருள்களைப் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்டது.
ஃபிஷரைச் சுட்டதாக நம்பப்படும் ஆடவர் தவறுதலாக விடுவிக்கப்பட்டதாகவும் அவர் குறித்த தகவலுக்கு 5,000 டாலர் வரை வெகுமதி வழங்கப்படும் என்றும் காவல்துறை தெரிவித்தது.
-AFP