Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

'லால் சலாம்' திரைப்படம் : ரசிகர்கள் கருத்து

வாசிப்புநேரம் -
இன்று வெளியான 'லால் சலாம்' திரைப்படத்திற்கு ரசிகர்கள் மாறுபட்ட கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.

புகழ்பெற்ற திரைப்பட நட்சத்திரம் ரஜினிகாந்த், தமது மகள் ஐஸ்வர்யாவின் இயக்கத்தில் A.R. ரஹ்மான் இசையமைப்பில் 'லால் சலாம்' திரைப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கிறார்.

பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவும் (Kapil Dev) சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்.

திரைப்படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் என்று பலர் நடித்துள்ளனர்.

'லால் சலாம்' திரைப்படத்தைக் கண்டு பாராட்டுகளைக் குவித்த ரசிகர்கள் ஒருபுறம்...

சிலர் அது இன்னும் சிறப்பாக எடுக்கப்பட்டிருக்கலாம் என்றனர்.

"ஐஸ்வர்யா ஒரு சிறந்த கருப்பொருளை மையமாக வைத்துப் படத்தை இயக்கியுள்ளார். இதனை அவரிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. ரஜினிகாந்தின் கதாபாத்திரம் சிறப்பாக அமைந்துள்ளது" என்றார் ஒருவர்.

"திரைப்படத்தின் கருப்பொருள் நன்றாக உள்ளது. ஆனால் அதனை எடுத்த விதம் சுமாராக உள்ளது. இன்னும் சிறப்பான பாடல்களை இசையமைத்திருக்கலாம்," என்றார் இன்னொருவர்.
ஆதாரம் : Others

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்