Skip to main content
லமீன் யமால்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

லமீன் யமால் - பேருக்குப் பின்னால்?

வாசிப்புநேரம் -
லமீன் யமால் - பேருக்குப் பின்னால்?

(படம்: REUTERS/Claudia Greco)

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

லமீன் யமால் (Lamine Yamal)

உலகக் கிண்ணத்தில் பரிச்சயமான பெயர்.

ஸ்பெயினின் பிரபல காற்பந்து வீரர்.

லமீனின் பெயருக்குப் பின்னால் ஒரு கதையுண்டு.

லமீனின் பெற்றோருக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டபோது இரு நண்பர்கள் அவர்களுக்கு உதவினர்.

ஒருவரின் பெயர் லமீன், இன்னொருவரின் பெயர் யமால்.

அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக லமீனுக்கு அவர்களின் பெயரைச் சூட்டினர் பெற்றோர்.

தமது வெற்றியைப் பெற்றோருக்கு அர்ப்பணித்தார் லமீன்.

குடும்பத்தின் பசியைப் போக்க ஓயாமல் உழைத்த தந்தைக்கும், அரும்பாடுபட்டு வளர்த்த தாய்க்கும் பெருமை சேர்த்தார்.

லமீன் ஒரு கோலை அடித்தவுடன், தமது விரல்களால் "304" என்ற எண்களைக் காட்டுவார்.

ஸ்பெயினின் ரொகாஃபொண்டா (Rocafonda) எனும் ஏழ்மையான வட்டாரத்தில் அவர் பிறந்து வளர்த்தவர்.

அந்த வட்டாரத்தின் அஞ்சல் குறியீடு 304.

பிறப்பிடத்தைக் கௌரவிக்க அவர் அந்த சைகையைச் செய்வதாகச் செய்தித் தளங்கள் தெரிவித்தன.

19 வயது லமீனை அடுத்த மெஸ்ஸி என்கின்றனர் பலர்.

 
ஆதாரம் : Others

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்