Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட Machu Picchu... சிக்கித் தவிக்கும் நூற்றுக் கணக்கான சுற்றுப்பயணிகள்

வாசிப்புநேரம் -

பெருவின் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான மச்சு பிச்சு (Machu Picchu) வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. 

அங்கு சிக்கிக்கொண்ட நூற்றுக்கணக்கான சுற்றுப்பயணிகளைப்  பாதுகாப்பாக வெளியேற்றுவதில் உள்ளூர் அதிகாரிகள் உதவி வருகின்றனர். 

வெள்ளத்தில்  அடித்துவரப்பட்ட பாறைகளும் சேறும் அங்குள்ள ரயில் பாதையை மூடிவிட்டன.  

அதனைத் தொடர்ந்து சுற்றுப்பயணிகள் நடந்தே அங்கிருந்து புறப்பட்டனர். 

கனத்த மழையால் கரைபுரண்டோடும் அல்கமாயோ (Alcamayo) ஆற்றைப் பாலம் வழியாக அவர்கள் கடந்தனர். 

வெள்ளத்தால் மூடப்பட்ட ரயில் தடங்களைக் கடந்த பிறகு பாதுகாப்பான  பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ரயில் வண்டிகளில் பயணிகள் ஏறினர். 

அகுவாஸ் கலியென்ட்டேஸ் (Aguas Calientes) நகரில் உள்ள குறைந்தது 2 ஹோட்டல்களை வெள்ளம் சூழ்ந்ததாகக் குடிமைத் தற்காப்புப் படையினர் தெரிவித்தனர். 

இன்க்கா (Inca) பூர்வகுடியினரின் தொல்பொருள் பாதுகாப்புப் பகுதிக்குச் செல்லும் சுற்றுப்பயணிகளில் பலர் அந்த நகரில் தங்குவது வழக்கம். 

அருகில் உள்ள மலைப்பகுதியில் இருக்கும் பெருவின் முக்கியப் பயணத்தலமான இன்க்கா ஆலயத்திற்கு எந்தச் சேதமும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 

மச்சு பிச்சு இன்க்கா மக்களால் 15ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. 

தென் கிழக்குப் பெருவில் உள்ள அமஸான் வட்டாரத்தில், சுமார் 2,500 மீட்டர் உயரத்தில் அந்தப் பழம்பெரும் ஆலயம் அமைந்துள்ளது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்