Skip to main content
"சுற்றுப்பயணிகளின் மரணம் வருத்தமளிக்கிறது"
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

"சுற்றுப்பயணிகளின் மரணம் வருத்தமளிக்கிறது" - லாவோஸ் அரசாங்கம்

வாசிப்புநேரம் -
லாவோஸில் methanol நச்சு சம்பவத்தால் 6 வெளிநாட்டு சுற்றுப்பயணிகள் மாண்டது மிகவும் வருத்தமளிப்பதாக அந்நாட்டு அரசாங்கம் கூறியிருக்கிறது.

மாண்டவர்களின் குடும்பத்தினருக்கு லாவோஸ் அரசாங்கம் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தது.

அந்த மதுபான நச்சு சம்பவம் வாங் வியோங்கில் (Vang Vieng) நடந்தது.

மாண்டவர்களில் 2 பேர் டென்மார்க் நாட்டவர்கள். ஒருவர் அமெரிக்கர். ஒருவர் பிரிட்டனைச் சேர்ந்தவர். இருவர் ஆஸ்திரேலியர்கள்.

இம்மாதம் (நவம்பர்) 12ஆம் தேதி உடல்நலம் பாதிக்கப்பட்ட சுற்றுப்பயணிகளில் சிலர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களில் சிலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

சம்பவம் குறித்து விசாரணை தொடர்கிறது.

சுற்றுப்பயணிகள் தங்கியிருந்த Nana Backpackers Hostelஇன் வியட்நாமிய நிர்வாகி விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

ஆனால் இன்னும் எந்தக் குற்றச்சாட்டும் பதிவுசெய்யப்படவில்லை.

இந்நிலையில் முழுமையான வெளிப்படையான விசாரணை வேண்டும் என்று கென்பரா (Canberra) லாவோஸ் அதிகாரிகளை வலியுறுத்துகிறது.

லாவோஸில் மதுபானம் அருந்தினால் methanol நச்சு ஆபத்துக் குறித்துக் கவனம் தேவை என்று பிரிட்டனும் ஆஸ்திரேலியாவும் தனது குடிமக்களை அறிவுறுத்தியிருக்கிறது.
ஆதாரம் : AFP

மேலும் செய்திகள் கட்டுரைகள்