லாவோஸ் மதுபானச் சம்பவம் - தங்கும் விடுதி ஊழியர்கள் கைது

AFP
லாவோஸில் methanol நச்சுக் கலந்த மது அருந்தியதாக நம்பப்படும் சம்பவத்தில் தங்கும் விடுதி மேலாளரும், ஊழியர்கள் 7 பேரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
வாங் வியோங் (Vang Vieng) நகரில் இம்மாதம் 12 ஆம் தேதி நச்சு மதுபானம் அருந்திய சுற்றுப்பயணிகள் 6 பேர் மாண்டனர்.
அவர்கள், டென்மார்க், பிரிட்டன், அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள்.
லாவோஸ் காவல்துறை தடுத்து வைத்துள்ள அனைவரும் வியட்நாமியர்கள்.
விசாரணை தொடர்கிறது.
சுற்றுப்பயணிகளின் மரணத்திற்குக் காரணமானவர்களுக்குத் தண்டனை விதிக்கப்படும் என்றும் லாவோஸ் உறுதி கூறியுள்ளது.
methanol போதையை அதிகரிக்கும் என்று கூறப்படுவதுண்டு. ஆனால் அது கண் பார்வைக்கும் கல்லீரலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தலாம். மரணத்தையும் விளைவிக்கலாம்.