பெட்ரோலுக்காக ஏங்கித் தவிக்கும் மக்கள்
This audio is generated by an AI tool.
லாவோஸ் தலைநகர் வியன்தியேனில் பெட்ரோல் நிலையங்களுக்கு வெளியே நீண்ட வரிசைகள்...
மத்திய கிழக்கில் நீடிக்கும் போரால் எரிபொருள் பற்றாக்குறை மோசமடைந்துள்ளது.
லாவோஸ் எரிபொருளுக்குப் பக்கத்து நாடான தாய்லந்தை அதிகம் சார்ந்துள்ளது.
எரிபொருள் ஏற்றுமதியைத் தற்காலிகமாக நிறுத்துவதாய்த் தாய்லந்து அறிவித்துள்ளது.
எனினும் லாவோஸிற்கு எரிபொருளை அனுப்ப அது இணங்கியுள்ளது.
லாவோஸில் சென்ற வாரம் 40 விழுக்காட்டுக்கும் அதிகமான பெட்ரோல் நிலையங்கள் மூடப்பட்டன.
அவற்றில் எரிபொருள் முற்றிலும் தீர்ந்துவிட்டன.
எஞ்சிய நிலையங்கள் மிச்சம் உள்ள எரிபொருளைப் பங்கீட்டு விநியோகிக்கின்றன.
அதற்காக 2 மணி நேரம்வரை மக்கள் வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது.
அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானைத் தாக்கியதை அடுத்து பதிலுக்கு ஈரான் மத்திய கிழக்கில் எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகள் மீது தாக்குதல் நடத்துகிறது.
ஈரான் அருகே உள்ள ஹோர்முஸ் நீரிணையும் மூடப்பட்டுள்ளது.
அதன்வழி தான் உலகின் 20 விழுக்காட்டு எரிபொருள் செல்கிறது.