Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

அமெரிக்காவின் லாஸ் வேகஸ் நகரில் உண்மையான புல்லுக்கு அனுமதியில்லை

வாசிப்புநேரம் -

அமெரிக்காவின் லாஸ் வேகஸ் (Las Vegas) நகரில்  வறட்சி காரணமாக அங்குள்ள புல்வெளிகளில் செயற்கைப் புல்லை வைப்பதற்கே இப்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

உண்மையான புல்லைப் பயன்படுத்துவது லாஸ் வேகஸ் நகரில் சட்டவிரோதமாகக் கருதப்படுகிறது. 

அங்கு பல ஆண்டுகள் நீடிக்கும் வறட்சியால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. 

பல மில்லியன் சதுர அடி பரப்பளவிலான புல்வெளிகள் அகற்றப்பட்டு செயற்கைப் புல் பொருத்தப்பட்டுள்ளது. 

நெவாடா (Nevada) மாநிலம் அருகிலுள்ள Mead ஏரியிலிருந்து தண்ணீரைப் பெறுகிறது. 

அங்கு நீர்மட்டம் இதுவரை இல்லாத அளவுக்குக்  குறைந்துள்ளது. 

அதனால் அந்த மாநிலத்தில் சிலவகை புற்களை வளர்ப்பது சட்டவிரோதமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. 

அலங்காரத்துக்கு மட்டும் பயன்படும் புல் வகைகளை நடுவதையும் அவற்றுக்குத் தண்ணீர் பாய்ச்சுவதையும் தடுக்கும் சட்டத்தை மாநில அரசாங்கம் ஏற்றுக்கொண்டது. 

2026ஆம் ஆண்டு இறுதிக்குள் புல்லை முற்றிலுமாக அகற்றவேண்டும் என்ற சட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டது.

வணிகங்களுக்கும் குடியிருப்புக் கட்டடங்களுக்கும் அந்தச் சட்டம் பொருந்தும் என்று கூறப்பட்டது. 

புதிதாகக் கட்டப்படும் வீடுகளின் வெளிப்புறங்களிலும் உண்மையான புல்லை நட அனுமதியில்லை. 

-Reuters

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்