இந்தியாவின் உத்தரகாந்த் மாநிலத்தில் திடீர்வெள்ளம் - 4 பேர் மரணம்
வாசிப்புநேரம் -
(கோப்புப் படம்: X/Handout via REUTERS)
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
இந்தியாவின் உத்தரகாந்த் (Uttarakhand) மாநிலத்தில், இமயமலைப் பகுதி நகர் ஒன்றில் ஏற்பட்ட திடீர்வெள்ளத்தில், குறைந்தது நால்வர் மாண்டனர்.
சுமார் 100 பேரைக் காணவில்லை.
திடீரென்று பெய்த கனத்த மழையால் சேறு நிறைந்த நீரும் இடிபாடுகளும் தராலி (Dharali) நகருக்குள் வழிந்தோடின.
செங்குத்தான மலைப்பகுதிகளில் வேகமாக ஓடிய வெள்ள நீர், கட்டடங்கள், சாலைகள், கடைகள் மீது வேகமாக மோதியது.
குடியிருப்புக் கட்டடங்கள் சில விநாடிகளில் அடித்துச் செல்லப்பட்டன. குடியிருப்பாளர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி கதறி, பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றனர்.
சில இடங்களில் சேற்றின் ஆழம் 15 மீட்டராக உள்ளது.
ராணுவத்தைச் சேர்ந்த மீட்புக்குழுக்கள் பிழைத்தவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளன.
சம்பவத்திற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இரங்கலைத் தெரிவித்துக்கொண்டார்.
தேடல், மீட்பு முயற்சிகளுக்காக ஆன அனைத்தையும் அதிகாரிகள் செய்வதாக அவர் கூறினார்.

ஆதாரம் : Others