லத்தீன் அமெரிக்க வட்டாரத்தில் அமெரிக்கா நடத்திய தாக்குதல்கள் பற்றித் தெரியுமா?
வாசிப்புநேரம் -
வெனிசுவேலாவின் (Venezuela) அதிபரையும் அவருடைய மனைவியையும் பிடிக்க அமெரிக்கா கடந்த சனிக்கிழமை அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டது.
இரவோடு இரவாக அவ்விருவரையும் கைதுசெய்து நாட்டிலிருந்து வெளியேற்றியது.
லத்தீன் அமெரிக்க வட்டாரத்தில் அமெரிக்கா ராணுவ ரீதியாகத் தலையிடுவதும் சர்வாதிகார ஆட்சிகளுக்கு ஆதரவு வழங்குவதும் இது முதன்முறையல்ல.
வாஷிங்டன் (Washington) ஆட்சிக்கவிழ்ப்புச் செய்யப் பல முறை முயற்சி செய்ததாகக் காலஞ்சென்ற வெனிசுவேலா அதிபர் ஹியுகோ சாவேஸும் (Hugo Chavez) அவருக்குப் பிறகு அதிபரான நிக்கொலஸ் மதுரோவும் (Nicolas Maduro) கூறியுள்ளனர்.
கெடுபிடிப் போருக்குப் பின் லத்தீன் அமெரிக்காவில் அமெரிக்கா நடத்திய சில முக்கியத் தாக்குதல்கள்..
🔴 1954 - குவாட்டமாலா (Guatemala)
ஜூன் 27 அன்று அமெரிக்கா பயிற்சியளித்து நிதி வழங்கிய கூலிப் படையினர் குவாட்டமாலா அதிபர் ஹகொபொ அபென்ஸ் குஸ்மானை (Jacobo Arbenz Guzman) அதிகாரத்திலிருந்து வெளியேற்றினர்.
அந்த ஆட்சிக்கவிழ்ப்பில் மத்தியப் புலனாய்வுப் பிரிவுக்குப் (CIA) பங்கிருந்ததை 2003ஆம் ஆண்டில் அமெரிக்கா ஒப்புக்கொண்டது.
கம்யூனிசத்துக்கு (communism) எதிராக அவ்வாறு செய்யப்பட்டதாக அது சொன்னது.
🔴 1961 - கியூபா (Cuba)
ஏப்ரல் 15க்கும் ஏப்ரல் 19க்கும் இடையில் காஸ்ட்ரோவுக்கு எதிரான 1,400 கிளர்ச்சியாளர்கள் பே ஆஃப் பிக்ஸ் (Bay of Pigs) பகுதியில் தரையிறங்க முயற்சி செய்தனர்.
ஃபிடெல் காஸ்ட்ரோவின் கம்யூனிஸ்ட் ஆட்சியைக் கவிழ்க்க அவர்கள் திட்டமிட்டனர். ஆனால் திட்டம் நிறைவேறவில்லை.
அங்கு நடந்த சண்டையில் இருதரப்பிலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் மடிந்தனர்.
🔴 1983 - கிரெனாடா (Grenada)
அக்டோபர் 25: கிரெனாடா பிரதமர் மோரிஸ் பிஷப்பை (Maurice Bishop) தீவிர இடசாரிகள் கொலை செய்தவுடன் அமெரிக்கச் சிறப்புப் படையினர் கிரெனாடா தீவினுள் நுழைந்தனர்.
ராணுவ விமானங்களை நிறுத்தி வைக்கக் கியூபாவைச் சேர்ந்தோர் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்துகொண்டிருந்தனர்.
எனவே மறைந்த முன்னைய அதிபர் ரோனல்ட் ரீகன் (Ronald Reagan) "Urgent Fury" எனும் அதிரடி நடவடிக்கைக்கு உத்தரவிட்டார்.
ஆயிரக்கணக்கான அமெரிக்கர்களைப் பாதுகாப்பது நோக்கம்.
நவம்பர் 3ஆம் தேதி நடவடிக்கை முடிவுக்கு வந்தது.
நூற்றுக்கும் அதிகமானோர் மாண்டனர்.
🔴 1989 - பனாமா (Panama)
அப்போதைய அதிபர் ஜார்ஜ் H.W. புஷ் (George H.W. Bush) பனாமாவில் ராணுவத் தாக்குதல் நடத்த உத்தரவிட்டார்.
அமெரிக்கா தேடி வந்த மெனுவல் நொரியேகா (Manuel Noriega) சரணடைய நேரிட்டது.
அவர் போதைப்பொருள் கடத்தலுக்காக அமெரிக்கச் சிறையில் 20 ஆண்டுகளுக்கும் மேல் கழித்த பிறகு பிரான்ஸ், பனாமா ஆகிய நாடுகளில் கூடுதல் தண்டனைகளை நிறைவேற்ற வேண்டும்.

ஆதாரம் : AFP