உலகம் trending
ஆரத்தழுவிய அஜித், விஜய் - ஆரவாரித்த ரசிகர்கள்
X/Vikram
This audio is generated by an AI tool.
தமிழக முதலமைச்சர் C. ஜோசஃப் விஜய்யும் நடிகர் அஜித்தும் கட்டி அணைத்துக்கொள்ளும் கண்கொள்ளாக் காட்சி இணையத்தில் வலம் வருகிறது.
லண்டனில் அந்தச் சம்பவம் நேர்ந்தது.
'தலை', 'தளபதி' என்று அவர்களைத் தமிழ்நாட்டு ரசிகர்கள் மிகவும் செல்லமாக அழைப்பது வழக்கம்.
அந்த இருபெரும் நடிகர்கள் லண்டனில் சந்தித்தனர்.
அவர்கள் அணைத்துக் கொள்ளும் காட்சியைக் கண்டு தமிழ்த் திரைப்பட ரசிகர்கள் ஆரவாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Le Mans Cup எனும் கார்ப்பந்தயத்தில் நேற்று (12 செப்டம்பர்) சம்பவம் நடந்தது.
LMP3 Pro/Am பிரிவில் அஜித் போட்டியிட்டார்.
பிரிட்டனுக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டிருக்கும் முதலமைச்சர் விஜய், பச்சைக் கொடியசைத்துப் போட்டியைத் தொடங்கிவைத்தார்.
போட்டி தொடங்குவதற்கு முன் இருவரும் சந்தித்துப் பேசினர்.
சமூக ஊடகத்தில் பகிரப்பட்ட காணொளியில் விஜய் அஜித்தை நோக்கி ஓடி வருவதையும் இருவரும் கட்டி அணைத்துக்கொள்வதையும் பார்க்கமுடிகிறது.
போட்டியின் வர்ணனையாளர்கள் இருவரையும் ஹாலிவுட்டின் பிராட் பிட்டுடனும் (Brad Pitt) டாம் குரூஸுடனும் (Tom Cruise) ஒப்பிட்டுக் கூறினர்.
"ஒரே இடத்தில் பிராட் பிட், டாம் குரூஸ் இருப்பதற்கு இது சமம்," என்று அவர்கள் கருத்துரைத்தனர்.
இணையவாசிகளின் மகழ்ச்சிக்கு அளவில்லை.
"தமிழ்த் திரையுலகில் இது மாபெரும் நிகழ்வு," என்று அந்தச் சாதனையை அவர்கள் புகழ்ந்தனர்.
"20 ஆண்டுக்கும் மேலாக இருவரின் ரசிகர்களுக்கு இடையே போர். அது மெதுவாக நிறைவுக்கு வருகிறது," என்று சொல்லிச் சிலர் குதூகலம் அடைந்தனர்.