Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

சிறையில் அடைக்கப்பட்ட அரசியல் தலைவர்கள்... யார், எப்போது, ஏன்?

வாசிப்புநேரம் -
சிறையில் அடைக்கப்பட்ட அரசியல் தலைவர்கள்... யார், எப்போது, ஏன்?

(கோப்புப் படம்: AP Photo/Themba Hadebe)

உலகத்தில் பல அரசியல் தலைவர்கள் சிறையில் அடைக்கப்படுவதைப் பற்றிக் கேட்டிருப்போம், சில நேரங்களில் தொலைக்காட்சியில் பார்த்திருப்போம்...

மலேசியாவின் புதிய பிரதமர் அன்வார் இப்ராஹிமும் அவர்களில் ஒருவர்.

1998ஆம் ஆண்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

அவர் மீது ஊழல், ஓரினப்புணர்ச்சி ஆகியவை தொடர்பான வழக்குகள் தொடுக்கப்பட்டன.

அவரைப் போன்று நன்கறிந்த அரசியல் தலைவர்கள் சிலர் கைதுசெய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர். 

அவர்கள் எதனால் கைதுசெய்யப்பட்டனர், எதற்குச் சிறையில் அடைக்கப்படுகின்றனர் என்பனவற்றைத் தெரிந்துகொள்ள மனம் தூண்டும். 

சிறையில் அடைக்கப்பட்ட தலைவர்கள் சிலரைப் பற்றிய தகவல்களை 'செய்தி' திரட்டியது...

நெல்சன் மண்டேலா 
தென்னாப்பிரிக்காவின் முதல் அதிபர்

சிறையில் அடைக்கப்பட்ட காலம்: 1962-1990

ஏன்?
Apartheid எனும் இனவாதத்தின் அடிப்படையிலான கொள்கைகளை ஆதரிக்கும் அரசியல் முறையை எதிர்த்ததால் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். 

ஜவஹர்லால் நேரு
இந்தியாவின் முன்னாள் பிரதமர் 

(கோப்புப் படம்: AP Photo)

சிறையில் அடைக்கப்பட்ட காலம்: 1943-1945

ஏன்?
இந்தியாவைப் பிறநாட்டின் ஆட்சியிலிருந்து விடுவிக்கும் திட்டம் ஒன்றுக்குத் தலைமையேற்றதால் அவர் கைதுசெய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். 

ஆங் சான் சூச்சி
மியன்மாரின் முன்னாள் அரசியல் ஆலோசகர் 

(கோப்புப் படம்: AFP)

அவர் 1989ஆம் ஆண்டு தொடங்கி 21 ஆண்டுகளாக வீட்டில் அடைக்கப்பட்டார்.

ஏன்?
ராணுவத்தரப்பினர் அவரை முடக்கி அத்தகைய தண்டனையை விதித்தனர்.

அவர் 2021ஆம் ஆண்டு பிப்ரவரி முதலாம் தேதியன்று கைது செய்யப்பட்டார்.

மியன்மார் ராணுவத்தரப்பினர், அரசாங்கத்தின் ஆட்சியைக் கவிழ்த்து ஆளுங்கட்சியின் மற்ற உறுப்பினர்களையும் அவரையும் கைது செய்தனர். 

அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. 

ஆதாரம் : AGENCIES

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்

Aa