Skip to main content
பாகிஸ்தானில் வெடிப்பு
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

பாகிஸ்தானில் வெடிப்பு - கட்டடம் இடிந்து 16 பேர் மரணம்

வாசிப்புநேரம் -
பாகிஸ்தானில் கட்டடம் இடிந்து விழுந்ததில் 16 பேர் மாண்டனர்.

கராச்சி (Karachi) நகரில் நடந்த சம்பவத்தில் 13 பேர் காயமுற்றனர்.

வெடிப்பு ஏற்பட்டதால் மூன்று மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

உள்ளூர் நேரடிப்படி அதிகாலை 4 மணி வாக்கில் சம்பவம் நடந்தது.

உள்ளூர் மக்கள் நோன்புக்கு முந்தைய உணவைத் தயார் செய்துகொண்டிருந்தபோது சம்பவம் நடந்தது.

வெடிப்பிற்கான காரணம் தெரியவில்லை.

அது எரிவாயு வெடிப்பு என்று கூறப்படுவதாக அதிகாரி ஒருவர் கூறினார்.

உண்மையான காரணம் விசாரணைக்குப் பின் தெரியவரும் என்றார் அவர்.
ஆதாரம் : AFP

மேலும் செய்திகள் கட்டுரைகள்