அட்லாண்டிக் கரையில் மாண்டுகிடந்த 910 டால்பின்கள்

AP
பிரான்சின் அட்லாண்டிக் (Atlantic) கரையில் குளிர்காலத்தின் தொடக்கத்திலிருந்து குறைந்தது 910 டால்பின்கள் மாண்டுகிடக்கக் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
சென்ற வாரம் மட்டும் 400க்கும் அதிகமான டால்பின்கள் கரையோரம் காணப்பட்டன.
அவற்றில் சில டால்பின்கள் மாண்டு சில நாள்கள் வரை ஆகிவிட்டது ஆய்வில் தெரிகிறது.
ஒருசில டால்பின்கள் பல வாரங்களுக்கு முன்பே இறந்தது தெரிய வந்தது.
டால்பின்கள் மீன்பிடி வலையிலும், படகு இயந்திரங்களிலும் மாட்டி காயமுற்று உயிர் இழக்கின்றன.
பிப்ரவரி, மார்ச் மாதங்களில் அவை உணவு தேடி கரைக்குச் செல்லும்போது அத்தகைய சூழல் ஏற்படுகிறது.
2017ஆம் ஆண்டிலிருந்து 2020ஆம் ஆண்டு வரை குளிர்காலத்தில் கரையில் மாண்டுகிடந்த டால்பின்களின் சராசரி எண்ணிக்கை 850.
-AFP