Skip to main content
பிலிப்பீன்ஸ் நிலநடுக்கம்: 8 பேர் மரணம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

பிலிப்பீன்ஸ் நிலநடுக்கம்: 8 பேர் மரணம்

வாசிப்புநேரம் -
பிலிப்பீன்ஸ் நிலநடுக்கம்: 8 பேர் மரணம்

படம்: Handout via Reuters/Philippine Red Cross

வெளியீடு : 08 Jun 2026 12:31PM புதுப்பிப்பு : 08 Jun 2026 01:38PM

பிலிப்பீன்ஸில் ஏற்பட்ட வலுவான நிலநடுக்கத்தில் 8 பேர் மாண்டதாக ஆக அண்மைத் தகவல் கூறுகிறது.

மாண்டவர்கள் பற்றி உடனடித் தகவல் இல்லை.

மிண்டானாவ் (Mindanao) பகுதியை 7.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உலுக்கியது.

9 மாநிலங்களில் கரையோரப் பகுதி மக்களுக்கு எச்சரிக்கை

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஒன்பது மாநிலங்களின் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள், உடனடியாகப் பாதுகாப்பான, உயரமான இடங்களுக்குச் செல்லுமாறு  அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

சரங்கனி (Sarangani), தாவி-தாவி (Tawi-Tawi), சூலு (Sulu) ஆகிய இடங்கள் அதிலடங்கும்.

மேலும் பல கட்டடங்கள் சேதம்

ஜெனரல் சாண்டோஸ் நகரில் நிலநடுக்கச் சேதங்கள் குறித்த கூடுதல் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

மணிலாவில் உள்ள DZRH வானொலி நிலையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, அதன் மாநிலக் கிளை செயல்பட்டு வந்த சிறிய கட்டடம்  பாதி இடிந்து விழுந்தது.

அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்குப் பாதிப்பில்லை.

முன்னதாக, நகரிலிருந்த 'ஜோலிபி' (Jollibee) துரித உணவகம் இடிந்து தரைமட்டமானது.

மக்கள் நடமாட்டமில்லாத பள்ளிக் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததாகவும் செய்திகள் வெளியாகின.

இந்தோனேசியாவில்....

பிலிப்பீன்ஸ் நிலநடுக்கத்தை அடுத்து இந்தோனேசியாவில் விடுக்கப்பட்டிருந்த சுனாமி எச்சரிக்கை மீட்டுக்கொள்ளப்பட்டது.

சுமார் நான்கரை மணி நேரத்துக்கு சுனாமி எச்சரிக்கை நடப்பில் இருந்தது.

இந்தோனேசியாவில் குறைந்தது 9 இடங்களில் சிறிய சுனாமி அலைகள் எழுந்ததாகக் கூறப்படுகிறது.

ஆபத்து அதிகம் உள்ள பகுதிகளில் வசிப்பவர்களை அங்கிருந்து வெளியேறி, உயரமான பகுதிக்குச் செல்லுமாறு அதிகாரிகள் வலியுறுத்தினர்.

ஆதாரம் : Others

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்