Skip to main content
"உக்ரேன் மன்னிப்புக் கேட்க வேண்டும்"
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

"உக்ரேன் மன்னிப்புக் கேட்க வேண்டும்"

வாசிப்புநேரம் -
"உக்ரேன் மன்னிப்புக் கேட்க வேண்டும்"

படம்: AP

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

தென்கொரிய அதிபர் லீ ஜே மியுங் (Lee Jae Myung) வடகொரியப் போர்க் கைதிகள் விவகாரத்தில் மிகவும் வருத்தமடைந்திருப்பதாகக் கூறியிருக்கிறார்.

போர்க் கைதிகள் இருவரையும் தென் கொரியாவிடம் ஒப்படைப்பதை ரகசியமாக வைத்திருக்க உக்ரேன் இணங்கியதாக சோல் கூறுகிறது.

உக்ரேன் அதை ஒப்புக்கொண்டு தகவலைக் கசியவிட்டதற்கு மன்னிப்புக் கேட்கவேண்டும் என்று திரு லீ வலியுறுத்துகிறார்.

கீவ் அவ்வாறு செய்ய மறுத்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எச்சரித்தார்.

இருதரப்பு அரசதந்திரிகள் விவகாரம் குறித்துக் கலந்து பேசுவதாகத் தென் கொரிய வெளியுறவு அமைச்சின் அதிகாரி ஒருவர் கூறினார்.

ரஷ்யாவுக்கு ஆதரவாகப் போரிட்ட வட கொரிய வீரர்கள் இருவர் உக்ரேனில் பிடிபட்டனர்.

அவர்களைத் தென் கொரியாவிடம் ஒப்படைத்ததாக ஐக்கிய நாட்டுப் பொதுச் சபையில் உக்ரேன் அதிபர் கடந்த வாரம் கூறினார்.

அப்போதுமுதல் சர்ச்சை தொடர்கிறது.
ஆதாரம் : Reuters

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்