60ஆவது பிறந்தநாள்: சிங்கப்பூருக்கு மலேசியா உருவாக்கிய LEGO 'காதல் கடிதம்'
வாசிப்புநேரம் -
படம்: LEGOLAND Malaysia Resort
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
சிங்கப்பூரின் 60ஆவது பிறந்தநாளையொட்டி LEGOLAND Malaysia நிறுவனம் மறுவடிவமைக்கப்பட்ட MINILAND Singaporeஐ உருவாக்கியுள்ளது.
2012இல் முதன்முறையாக அறிமுகம் கண்ட MINILAND Singapore முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிக அற்புதமான அனுபவமாக மாற்றப்பட்டுள்ளது.
அதனை வடிவமைக்க 16,000 மணி நேரங்கள் ஆனது. 1.5 மில்லியனுக்கும் மேற்பட்ட LEGO கட்டைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

அந்த LEGO வடிவமைப்பு 10 படகுகள், 80 வாகனங்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் அதிகமான நுணுக்கமான காட்சிகளைக் கொண்டிருக்கிறது.
1,600க்கும் மேற்பட்ட Minilanders எனும் சிறிய LEGO உருவங்களைக் கொண்டு அது உயிர்ப்பிக்கப்பட்டுள்ளது.
1,600க்கும் மேற்பட்ட Minilanders எனும் சிறிய LEGO உருவங்களைக் கொண்டு அது உயிர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அருவிகள், நகரும் வாகனங்கள் என்று தொடங்கி MINILAND Singapore வடிவமைப்புக்கு ஒளி, ஒலி ஆகியவை கூடுதல் மெருகேற்றுகின்றன.
சிங்கப்பூரின் கட்டடக்கலை அதிசயங்களையும் அன்றாட வாழ்க்கை அனுபவத்தையும் வருகையாளர்கள் பெறுவதற்கு இவை வழிவகுக்கின்றன.
மொத்தத்தில் ஒரு சிறிய சிங்கப்பூருக்குள் அடியெடுத்துவைத்த அனுபவத்தை வருகையாளர்கள் பெறமுடியும் என்கிறது LEGOLAND Malaysia.

மறுவடிவமைக்கப்பட்ட MINILAND Singaporeஇல் மரினா பே சாண்ட்ஸில் உள்ள கோபுரங்களைப் போல் 4 மீட்டர் உயரத்தில் மாதிரி கோபுரங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
சிங்கப்பூர் ஃப்ளையர் (Singapore Flyer), மெர்லாயன் நீருற்று (Merlion Fountain) உள்ளிட்ட பிரபலமான தளங்களும் உருவாக்கப்பட்டுள்ளன.
சிங்கப்பூர் ஃப்ளையர் (Singapore Flyer), மெர்லாயன் நீருற்று (Merlion Fountain) உள்ளிட்ட பிரபலமான தளங்களும் உருவாக்கப்பட்டுள்ளன.
புதுப்பிக்கப்பட்ட இந்த MINILAND Singapore LEGO கட்டமைப்பு தென்கிழக்காசியாவின் மிகவும் புகழ்பெற்ற நாடுகளில் ஒன்றான சிங்கப்பூருக்குத் தாங்கள் அனுப்பும் காதல் கடிதம் என்று LEGOLAND Malaysia நிறுவனம் அறிக்கையில் கூறியிருக்கிறது.
சிங்கப்பூரின் 60ஆவது பிறந்தநாளையொட்டி வருகையாளர்களுக்கு நுழைவுச்சீட்டுக்கான விலைக் கழிவுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
மேல் விவரங்களுக்கு LEGOLAND Malaysia இணையப்பக்கம் அல்லது சமூக ஊடகங்களை நாடலாம்.
மேல் விவரங்களுக்கு LEGOLAND Malaysia இணையப்பக்கம் அல்லது சமூக ஊடகங்களை நாடலாம்.
ஆதாரம் : Others