Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

உக்ரேனுக்குக் கவச வாகனங்களை அனுப்பத் திட்டமிடும் அமெரிக்கா, ஜெர்மனி

வாசிப்புநேரம் -
உக்ரேனுக்குக் கவச வாகனங்களை அனுப்பத் திட்டமிடும் அமெரிக்கா, ஜெர்மனி

(படம்: PATRIK STOLLARZ / AFP)

உக்ரேனுக்குக் கவச வாகனங்களை அனுப்ப, அமெரிக்காவும் ஜெர்மனியும் தனித்தனியே முடிவெடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவுக்கு எதிராக உக்ரேனுக்கு உதவ அந்த வாகனங்கள் அனுப்பப்படுகின்றன.

அதன் தொடர்பிலான அறிவிப்பு இன்று வெளியிடப்படலாம் என்று  New York Times, Reuters செய்தி நிறுவனங்கள் குறிப்பிட்டன.

ஜெர்மானியப் பிரதமர் ஓலாஃப் ஷோல்ஸ் (Olaf Scholz) , உக்ரேனுக்கு Leopard 2 ரகக் கவச வாகனங்களை அனுப்ப முடிவெடுத்துள்ளதாய் அந்நாட்டு ஊடக அறிக்கைகள் குறிப்பிட்டன.

ஏனைய ஐரோப்பிய நாடுகள் அவ்வாறு செய்வதற்கும் ஜெர்மனி அனுமதித்துள்ளது.

இருப்பினும் அதன் தொடர்பில் எந்த அதிகாரபூர்வத் தகவலும் வெளியிடப்படவில்லை.

கடந்த வாரம், உக்ரேனுக்கு Leopard 2 ரகக் கவச வாகனங்களை அனுப்புவது குறித்து அமெரிக்காவுக்கும் ஜெர்மனிக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவியது.

அவற்றை வழங்குவதால், உக்ரேன்-ரஷ்யப் பூசல் தீவிரமடையக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்

Aa