Skip to main content
LG, Everest பெருங்காயப் பொடிகளுக்கு இந்தியாவில் தடை
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம் trending

LG, Everest பெருங்காயப் பொடிகளுக்கு இந்தியாவில் தடை - தெரியுமா?

வாசிப்புநேரம் -
LG, Everest பெருங்காயப் பொடிகளுக்கு இந்தியாவில் தடை - தெரியுமா?
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

LG, Everest நிறுவனங்களின் பெருங்காயப் பொடிகளை விற்க இந்தியாவில் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

அந்தத் தகவலை இந்தியாவின் உணவுப் பாதுகாப்பு, தரக் கட்டுப்பாட்டு ஆணையம் நேற்று (ஆகஸ்ட் 30) அறிவித்தது.

இரு நிறுவனங்கள் தயாரிக்கும் பெருங்காயப் பொடிகளின் தரம் குறைவாக இருந்தது சோதனையில் தெரியவந்ததாக ஆணையம் சொன்னது.

பெருங்காயம் என்று வகைப்படுத்தப்பட என்னென்ன இருக்க வேண்டும்?

1) பெருங்காயப் பொடியின் எடையில் அதிகபட்சம் 1 விழுக்காடு தான் மாவுச்சத்து (starch) இருக்கவேண்டும்.

2) 5 விழுக்காடு ஆல்கஹாலில் பெருங்காயம் கரைய வேண்டும்.

என்ன நடந்தது?

LG பெருங்காயத்தின் எடையில் 1 விழுக்காட்டுக்கும் அதிகமாக மாவுச்சத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

6 மாதிரிகள் சோதிக்கப்பட்டன. அனைத்திலும் அந்தப் பிரச்சினை இருந்தது.

Everest பெருங்காயம் 5 விழுக்காடு ஆல்கஹாலில் கரையவில்லை. மாறாக, அதன் மஞ்சள் பெருங்காயம் 3.29 விழுக்காடு ஆல்கஹாலிலும் கறுப்புப் பெருங்காயம் 4.4 விழுக்காடு ஆல்கஹாலிலும் கரைந்தன.

இரண்டு நிறுவனங்களின் பெருங்காயம் தரக் கட்டுப்பாடுகளைப் பூர்த்தி செய்யவில்லை என்பதால் அவற்றின் விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தரக் குறைபாட்டைச் சரிசெய்ய இரு நிறுவனங்களுக்கும் அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது.

அவ்வாறு செய்யாவிட்டால் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும் என்று ஆணையம் தெரிவித்தது.
ஆதாரம் : Others

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்