உலகம் trending
200 முறை ‘squat’ செய்யச் சொன்ன நிறுவனம் - பெண் ஊழியரின் உயிருக்கு ஆபத்து
வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
சில முறை குனிந்து எழுந்தாலே மூச்சு வாங்கும்....
200 தடவை செய்தால்?
அதைத்தான் ஒரு நிறுவனம் தனது ஊழியரைச் செய்யச் சொல்லியிருக்கிறது.
சம்பவம் சீனாவில் நடந்தது.
யாங் (Yang) என்ற அந்தப் பெண் நிதி ஆலோசகராக முதல் வேலையில் சேர்ந்தார்.
நாள் ஒன்றுக்கு 200 வாடிக்கையாளர்களை அழைத்துப்பேச வேண்டும் என்று மேலாளர் நிபந்தனை போட்டார்.
ஒருநாள் யாங் வேலையை முடிக்கவில்லை.
100 முறை 'squat' செய்ய வேண்டும்; இல்லையென்றால் முடிக்காத ஒவ்வொரு வேலைக்கும் 50 யுவான் (சுமார் 9 வெள்ளி) செலுத்த வேண்டும் என்றார் மேலாளர்.
இரண்டையும் செய்யாததால், வேலையைத் தக்கவைத்துக்கொள்ள 200 முறை 'squat' செய்ய யாங் முன்வந்தார்.
அதனை காணொளி எடுத்து மேலாளருக்கு ஆதாரமாக அனுப்பினார்.
பிறகு அவரால் சரியாக நடக்கமுடியவில்லை.
பணப் பிரச்சினையால் மருத்துவ உதவியையும் நாட முடியவில்லை.
ஐந்து நாளுக்குப் பின் யாங், சிறுநீர் கழித்தபோது அது கருநிறமாக இருப்பதை கவனித்தார்; மருத்துவமனைக்குச் சென்றார்.
அவருக்கு ராப்டோமயோலிசிஸ் (rhabdomyolysis) எனப்படும் ஒருவித தசைப் பிரச்சினை இருப்பது சோதனையில் தெரியவந்தது.
அவை சிறுநீரகத்தைப் பாதித்து, உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
வேலையைவிட உடல்நலமே முக்கியம் என்று இணையவாசிகள் ஆவேசம் கொண்டனர்.

ஆதாரம் : South China Morning Post