Skip to main content
உணவின்றித் தண்ணீர் மட்டும் அருந்திய பெண்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம் trending

உணவின்றித் தண்ணீர் மட்டும் அருந்திய பெண்- நடக்க முடியவில்லை

வாசிப்புநேரம் -
உணவின்றித் தண்ணீர் மட்டும் அருந்திய பெண்- நடக்க முடியவில்லை
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

ஆபத்தான உணவுமுறையைக் கடைப்பிடித்த பெண் நடக்க முடியாமல் தவிக்கிறார்.

அவர் 15 நாள்களுக்குத் தண்ணீர் மட்டுமே அருந்தினார்.

பெண்ணுக்கு வயது 31.

அவர் சீனாவின் ஹெனான் (Henan) மாநிலத்தைச் சேர்ந்தவர்.

முன்பு அவரது உடல் எடை 70 கிலோகிராம்.

இரண்டு வாரங்களில் 20 கிலோகிராம் குறைத்தார்.

மூளை பாதித்தது; நினைவாற்றல் குன்றியது.

அடுமட்டுமல்ல.

அவர் நடப்பதற்கே சிரமப்பட்டார்.

அவர் பெங்குவினைப் போல் நடமாடியதாக மருத்துவர் குறிப்பிட்டார்.

பெண் குணமடையாமல் வாழ்நாள் முழுதும் அவதியுறக்கூடும் என்று மருத்துவர் கூறினார்.

சீனாவில் சிலர் ஆபத்தான உணவுமுறையைக் கடைப்பிடிக்கின்றனர்.

அது கடும் உடல்நலச் சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

உரிய ஊட்டச்சத்துப் பெற முறையாகச் சாப்பிடவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
ஆதாரம் : South China Morning Post

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்