Skip to main content
Eiffel கோபுரத்தில் கண்ணைப் பறிக்கும் மின்னல்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம் trending

Eiffel கோபுரத்தில் கண்ணைப் பறிக்கும் மின்னல்

வாசிப்புநேரம் -
Eiffel கோபுரத்தில் கண்ணைப் பறிக்கும் மின்னல்

படம்: Instagram/@sfavier_photo

வெளியீடு : 29 Jun 2026 01:12PM புதுப்பிப்பு : 30 Jun 2026 10:47AM
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் அமைந்திருக்கும் பிரபல ஐஃபல் கோபுரத்தை (Eiffel Tower) மின்னல் தாக்கியுள்ளது.

அந்த அதிர்ச்சியூட்டும் காட்சியின் காணொளிகளைப் பலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டனர்.

பிரான்ஸைக் கடும் வெப்பம் வாட்டி எடுத்துக்கொண்டிருக்கிறது.
நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர்.

வெப்பத்தைச் சற்று தணிக்கும் வகையில் வாரயிறுதியின்போது பாரிஸில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.

அப்போதுதான் ஐஃபல் கோபுரத்தை மின்னல் தாக்கியது.

வெப்பம் தணிந்துவிட்டதற்கான அறிகுறி இது என்று இணையவாசிகள் பலர் பதிவிட்டனர்.

"கண்கொள்ளாக் காட்சி" என்றும் பலர் பாராட்டினர்.

மின்னல் தாக்கியதை நேரில் கண்ட சிலர், பார்ப்பதற்குப் பயங்கரமாக இருந்ததாகக் கூறினர்.

சிலர் பருவநிலை மாற்றம் மேலும் மேலும் மோசமாவதை அது காட்டுகிறது என்று கவலைப்பட்டனர்.

பருவநிலை மாற்றத்தால் கடும் வெப்பமும் கனமழையும் புதிய இயல்பு நிலையாகும் அபாயம் இருக்கிறது; அதற்கு பிரான்ஸ் தயாராக இருப்பதாகத் தெரியவில்லை என்று பலர் குறைகூறினர்.

மின்னலால் ஐஃபல் கோபுரத்துக்குப் பாதிப்பு?

கோபுரத்தைக் கட்டும்போதே மின்னல் கடத்திகள் பொருத்தப்பட்டன. கடத்திகள் மின்னலிலிருந்து வரும் மின்சாரத்தைத் தரைக்குக் கொண்டுசென்று சிதறடிக்கும். இதனால் கோபுரம் பாதிக்கப்படாது.
ஆதாரம் : Mediacorp Seithi

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்