Skip to main content
மத்திய கிழக்கிலிருந்து சில விமானச் சேவைகள் தொடங்குகின்றன
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

மத்திய கிழக்கிலிருந்து சில விமானச் சேவைகள் தொடங்குகின்றன

வாசிப்புநேரம் -
மத்திய கிழக்கிலிருந்து சில விமானச் சேவைகள் தொடங்குகின்றன
AFP/Fadel SENNA

மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து தாயகம் திரும்ப எண்ணும் பயணிகளுக்காகச் சில விமானச் சேவைகள் தொடங்கியுள்ளன.

அமெரிக்காவும் இஸ்ரேலும் கடந்த சனிக்கிழமை (28 பிப்ரவரி) ஈரானைத் தாக்கத் தொடங்கியதிலிருந்து விமானச் சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

ஈரான், ஈராக், இஸ்ரேல் ஆகியவற்றின் வான்வெளி மூடப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபுச் சிற்றரசுகள், ஜோர்தான், கத்தார், குவைத், சவுதி அரேபியா, பஹ்ரேன் போன்றவற்றில குறிப்பிட்ட சில விமானச் சேவைகள் மட்டுமே வழங்கப்படுகின்றன.

ஐக்கிய அரபுச் சிற்றரசுகளில் எட்டிஹாட் ஏரவேஸ் (Etihad Airways), எமிரேட்ஸ் (Emirates), FlyDubai ஆகியவை சேவை வழங்கத் தொடங்கியுள்ளதாகத் தெரிகிறது.

அதில் இந்தியா, பிரான்ஸ், ரஷ்யா, பிரிட்டன் போன்றவற்றுக்குச் செல்லும் விமானங்கள் அடங்கும். 

மத்திய கிழக்கு நாடுகளில் தெற்காசியாவைச் சேர்ந்த மில்லியன் கணக்கானோர் வேலை செய்கின்றனர்.

இந்நிலையில் இந்திய விமான நிறுவனங்களும் ஜித்தா (Jeddah), மஸ்கட் (Muscat) ஆகியவற்றில் சேவை வழங்கத் தொடங்கியுள்ளன.

ஆதாரம் : AGENCIES

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்