ரொனால்டோ சாதனையை உடைப்பாரா மெஸ்ஸி?
வாசிப்புநேரம் -
(படம்: Matias Baglietto/Reuters)
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
லயனல் மெஸ்ஸி (Lionel Messi) அனைத்துலகக் காற்பந்துப் போட்டிகளில் 10வது ஹாட்ரிக் (hat-trick) கோல்களை அடித்துள்ளார்.
அதன் மூலம் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் அனைத்துலக ஹாட்ரிக் சாதனையை ஈடுசெய்தார்.
கடந்த செவ்வாய்க்கிழமை (அக்டோப்ர் 15) 2026 உலகக் கிண்ணத் தகுதிச் சுற்று ஆட்டத்தில் ஆர்ஜென்ட்டினா பொலிவியாவுடன் மோதியது.
கணுக்கால் காயத்திற்குப்பின் தன் நாட்டுக்காக மெஸ்ஸி களமிறங்கிய இரண்டாம் ஆட்டம் இது.
சொந்தத் திடலில் ஆடிய ஆர்ஜென்ட்டினா, 6-0 எனும் கோல் கணக்கில் அபார வெற்றியடைந்தது.
ஆட்டத்தின் 19வது நிமடத்தில் மெஸ்ஸி முதல் கோலடித்துத் தன் அணியை முன்னிலைக்குக் கொண்டு சென்றார்.
அடுத்த இரு கோல்களிலும் முக்கியப் பங்கு வகித்தார். பின் ஆட்டம் முடிவதற்குச் சில நிமிடங்களே எஞ்சியிருந்த நிலையில் அடுத்தடுத்து இரண்டு கோல்கள் புகுத்தி ரசிகர்களைப் பரவசப்படுத்தினார்.
இந்த வயதிலும் சொந்த மண்ணில் ஆடுவது தன்னை ஒரு சிறுவனைப்போல் உணரவைக்கிறது என்றார் மெஸ்ஸி.
அவருக்கு வயது 37.

ஆதாரம் : Others