Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஒலிம்பிக் 2024: அடுத்த சுற்றுக்கு முன்னேறிய சிங்கப்பூர் பேட்மிண்டன் வீரர்

வாசிப்புநேரம் -
ஒலிம்பிக் போட்டிகளில் சிங்கப்பூர் பேட்மிண்டன் வீரர் லோ கியென் இயூ (Loh Kean Yew) அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

2004ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆடவர் பேட்மிண்டன் பிரிவில் முதல் 16 இடங்களுக்குள் வந்துள்ள முதல் சிங்கப்பூர் வீரர் லோ.

இன்று இரவு சீனாவின் லீ ஷீ ஃபெங்கைச் (Li Shi Feng) சந்திக்கிறார் லோ.

லோ, எல் சால்வடோரின் (El Salvador) உரியேல் கஞ்சுராவுடன் (Uriel Canjura) மோதினார்.

ஆட்டத்தின் தொடக்கமே அமர்க்களம்.

போட்டியின் முதல் செட் கணக்கு 21-13.

இரண்டாவது செட்டின் தொடக்கத்தில் சற்று தடுமாற்றம்.

பிறகு சுதாரித்துக் கொண்டார் லோ.

21-13 என்ற எண்ணிக்கையில் வெற்றி பெற்றார் லோ.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்