லண்டனில் ஈரான் தூதரகத்தின் கூரை மீது ஏறிய ஆர்ப்பாட்டக்காரர்
வாசிப்புநேரம் -
லண்டன் நகரில் உள்ள ஈரான் தூதரகத்தின் கூரை மீது ஏறிய ஓர் ஆர்ப்பாட்டக்காரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அங்கு தொங்கவிடப்பட்டிருந்த ஈரானிய தேசியக் கொடியை அவர் அகற்றினார்.
அவர் சட்டவிரோதமாகத் தனியார் வளாகத்துக்குள் நுழைந்ததாகக் காவல்துறை தெரிவித்தது.
பல்வேறு மாடங்களைத் தாண்டிச் சென்ற அந்த ஆர்ப்பாட்டக்காரர் தூதரகத்தின் கூரை மேல் ஏறிக் கொடியை அகற்றியதாக அது கூறியது.
ஈரான் தூதகரத்திற்கு வெளியே நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஒருசில அதிகாரிகள் காயமுற்றதாகவும் அது குறிப்பிட்டது.
அதிகாரிகள் மீது பொருள்கள் வீசப்பட்டதாகக் காவல்துறை சொன்னது.
வன்முறையில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அது கூறியது.
ஈரான் தூதரகத்தைப் பாதுகாக்கக் கூடுதல் அதிகாரிகள் பணியமர்த்தப்படுவர் என்று சென்ற வாரம் லண்டன் காவல்துறை தெரிவித்திருந்தது.
அண்மை வாரங்களில் ஈரானில் பல ஆண்டுகளில் காணாத மிகப் பெரிய அளவிலான அரசாந்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
அதில் பல்லாயிரம் பேர் கொல்லப்பட்டதாக நம்பப்படுகிறது.

ஆதாரம் : AFP