உலகச் சாதனை படைக்கும் லண்டன் நெடுந்தொலைவு ஓட்டம்
வாசிப்புநேரம் -

(கோப்புப் படம்: REUTERS/Brian Snyder)
லண்டன் நெடுந்தொலைவு ஓட்டப்பந்தயம் உலகச் சாதனையைப் படைக்கவிருக்கிறது.
56,000க்கும் அதிகமானோர் அந்த நிகழ்வில் பங்கேற்கவுள்ளனர்.
எனவே ஆக அதிகமான பங்கேற்பாளர்களைக் கொண்ட நெடுந்தொலைவு ஓட்டப்பந்தயமாக அது அமையவிருக்கிறது.
தற்போதைய உலகச் சாதனையின்படி, நியூயார்க் நகரின் நெடுந்தொலைவு ஓட்டத்தில் 55,646 பேர் ஓடினர்.
கடந்த நவம்பர் மாதம் (2024) நடந்த அந்தச் சாதனையை முறியடிக்கவிருக்கிறது லண்டன் நெடுந்தொலைவு ஓட்டம்.
அதில் கலந்துகொள்ள முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு 840,318 பேர் விண்ணப்பித்ததாக ஏற்பாட்டாளர்கள் கூறினர்.
அதில் பாதி விண்ணப்பங்கள் பெண்களிடமிருந்து வந்தன.
உலகிலேயே ஆகப் பெரிய நெடுந்தொலைவு ஓட்டப்பந்தயமாக இருந்தால் சிறப்பாக இருக்கும் என்று லண்டன் நெடுந்தொலைவு ஓட்டத்தின் தலைமை நிர்வாக அதிகாரி குறிப்பிட்டார்.

ஆதாரம் : Reuters