Louvre அருங்காட்சியகத்தின் திருட்டு தொடர்பில் இருவர் கைது
STEPHANE DE SAKUTIN / AFP
This audio is generated by an AI tool.
பிரான்சின் லூவர் (Louvre) அருங்காட்சியகத்தின் திருட்டில் தொடர்பிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் இருவரை
அதிகாரிகள் தடுத்துவைத்துள்ளனர்.
4 பேர் கொண்ட குழு அந்தத் திருட்டில் ஈடுபட்டிருந்ததாக நம்பப்படுகிறது.
களவாடப்பட்ட நகைகள் அரச குடும்பத்துக்குச் சொந்தமானவை.
மொத்தம் 8 ஆபரணங்களும் கலைப்பொருள்களும் திருடப்பட்டன.
அவற்றின் மதிப்பு சுமார் 102 மில்லியன் டாலர் (132.5 மில்லியன் வெள்ளி).
கடந்த வாரம் பட்டப்பகலில் ஏழே நிமிடத்துக்குள்
அவை திருடப்பட்டன.
அருங்காட்சியகத்திலிருக்கும் மிகவும் விலையுயர்ந்த நகைகளில் சில பிரான்ஸ் வங்கிக்கு மாற்றப்பட்டுள்ளன.
அந்தப் பெட்டகத்தில்தான் பிரான்சின் 90 விழுக்காடு தங்கப் பொக்கிஷங்களும் Leonardo Da Vinciஇன் குறிப்பேடுகளும் இதர தேசியப் புதையல்களும் வைக்கப்பட்டுள்ளன.