Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

பாரிஸ் Louvre அருங்காட்சியகம் திருட்டுக்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட்டது

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

பாரிஸின் லூவர் (Louvre) அருங்காட்சியகம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. அதிலிருந்த பிரெஞ்சு அரச நகைகள் களவாடப்பட்டதை அடுத்து அந்த அருங்காட்சியகம் கடந்த 3 நாளாக மூடப்பட்டிருந்தது.

அது காலை 9 மணிக்கு வழக்கம்போல் திறக்கப்பட்டதாக AFP நிருபர் தெரிவித்தார்.

எனினும் Apollo Gallery எனும் கொள்ளை நடந்த இடம் தொடர்ந்து மூடப்பட்டுள்ளது.

கொள்ளைச் சம்பவம் அக்டோபர் 19ஆம் தேதி நடந்தது.

கொள்ளையடித்தவர்கள் அதிகப் பயிற்சிவாய்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

அவர்களைக் காவல்துறை தீவிரமாகத் தேடி வருகிறது.

உலகின் ஆகப் பிரபலமான அருங்காட்சியங்களில் லூவரும் ஒன்று.
ஆதாரம் : AFP

மேலும் செய்திகள் கட்டுரைகள்