Skip to main content
14 ஆண்டுகளாக நின்ற சொகுசுக் கப்பல்... திடீரெனச் சாய்ந்தது
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம் trending

14 ஆண்டுகளாக நின்ற சொகுசுக் கப்பல்... திடீரெனச் சாய்ந்தது

வாசிப்புநேரம் -
14 ஆண்டுகளாக நின்ற சொகுசுக் கப்பல்... திடீரெனச் சாய்ந்தது

காணொளியிலிருந்து எடுக்கப்பட்ட படம்

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

சீனாவில் சுமார் 14 ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படாமல் இருந்த, மிதக்கும் சொகுசு ஹோட்டலாக மாறிய உல்லாசக் கப்பல், துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்தபோது திடீரென ஒருபக்கமாகச் சாய்ந்தது.

இந்தச் சம்பவம், ஸெஜியாங் மாநிலத்தின் வென்சோ (Wenzhou) நகரில் ஜூலை 14ஆம் தேதி நிகழ்ந்தது.

அப்போது கப்பலில் பயணிகளோ சிப்பந்திகளோ இல்லாததால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

கடல் அலைகள் உயர்ந்தபோது கப்பல் சாய்ந்ததாக அதன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஆனால் சம்பவத்திற்கான சரியான காரணம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

இதுகுறித்து விசாரணை நடைபெறுகிறது.

'மிங்ஜூ எண் 7' (Mingzhu No. 7) என்ற அந்தக் கப்பல், 2012ஆம் ஆண்டு வெள்ளோட்டம் கண்டது.

அதன் கட்டுமானத்துக்கு 200 மில்லியன் யுவானுக்கும் மேல் செலவானது.

அது ஐந்து நட்சத்திரத் தரத்திலான மிதக்கும் சொகுசு ஹோட்டலாக வடிவமைக்கப்பட்டது.

அதில் 1,000-க்கும் அதிகமான விருந்தினர்கள் தங்க வசதி இருந்தது.

11 உணவகங்களும் அமைக்கப்பட்டிருந்தன.

இருப்பினும் அந்தக் கப்பல் முழுமையான செயல்பாட்டுக்கு வரவேயில்லை.

நிதிப் பற்றாக்குறை அதற்கான முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

போதுமான துறைமுக வசதிகள் இல்லாததால் திட்டம் மேலும் தாமதமானது.

இதனால் கடந்த 14 ஆண்டுகளாக அந்தக் கப்பல் பெரும்பாலும் பயன்படுத்தப்படாமல் இருந்தது.

கப்பலின் நிலைமை தற்போது ஆய்வு செய்யப்படுகிறது.

மீட்புப் பணி எப்போது தொடங்கும் என்பது குறித்து அறிவிக்கப்படவில்லை.
ஆதாரம் : Others

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்