ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க பிரான்ஸ் முயற்சி
This audio is generated by an AI tool.
ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க பிரான்சும் அதன் நட்பு நாடுகளும் நடவடிக்கை எடுக்கவிருக்கின்றன.
அது முற்றிலும் தற்காப்புக்கான நடவடிக்கை என்றார் பிரெஞ்சு அதிபர் இம்மானுவெல் மக்ரோன் (Emmanuel Macron).
ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறந்து எண்ணெய், எரிசக்திக் கப்பல் போக்குவரத்தைச் சீராக்குவது இலக்கு என்று அவர் சொன்னார்.
சைப்பிரஸ் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஐரோப்பிய வட்டாரம் மீதும் தொடுக்கப்பட்ட தாக்குதலாகக் கருதப்படுகிறது என்றார் திரு மக்ரோன்.
ஈரான் அல்லது அதற்கு ஆதரவான ஹிஸ்புல்லா கிளர்ச்சிக் குழு சைப்பிரசில் உள்ள பிரிட்டிஷ் தளத்தை அண்மையில் தாக்கின.